districts

இரவு ஊரடங்கு  இன்று முதல் நீக்கம்

சென்னை, ஜன.27- தமிழ்நாட்டில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அனைத்துப் பள்ளி கல்லூரிகளுக்கும் நேரடி வகுப்பு நடைபெறும். அதேநேரத்தில் மழலையர் பள்ளிகளை திறக்க அனுமதி இல்லை என்றும் தற்போது அமலில் இருந்து வரும் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு வெள்ளியன்று முதல் முற்றி லும் நீக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது.  மேலும், திரையரங்குகளை திறப்பதற்கும் அனுமதி அளிக் கப்பட்டுள்ளது.  அதே நேரத்தில், கலாச்சார நிகழ்ச்சிகள் அர சியல் கட்சி பொதுக்கூட்டங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.