திஸ்பூர்:
அசாம் மாநிலம் ஓரங்தேசிய வனவிலங்குபூங்காவிற்கு வைக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பெயரை நீக்குவதென அம்மாநில பாஜக அரசு முடிவு செய்துள்ளது.
விளையாட்டு வீரர்களுக் கான தேசிய அளவிலான “ராஜீவ் காந்தி கேல் ரத்னா” விருதிலிருந்து ராஜீவ் காந்தி பெயரை பிரதமர் மோடி அண்மையில் நீக்கினார். அந்த விருதுக்கு மேஜர் தியான்சந்த் பெயரைச் சூட்டினார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந் தது. எனினும், தற்போது இதையே முன்மாதிரியாக வைத்து, பாஜக ஆட்சி நடக்கும் மாநிலங்களிலும், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி,ராஜீவ் காந்தியின் பெயர் களை நீக்கும் வேலைகள் நடந்து வருகின்றன.கர்நாடகத்தில் ‘இந்திரா உணவகம்’ என்ற பெயரை, ‘அன்னபூர்னேஸ்வரி உணவகம்’ என்று மாற்றவும், கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்திலுள்ள ராஜீவ் காந்தி தேசிய பூங்காவின் பெயரிலிருந்து ராஜீவ் காந்தி-யை நீக்கிவிட்டு நாகரஹொளே தேசியபூங்கா என, அதனை மாற்றவும் முயற்சிகள் நடந்து வருகின்றன.
அதனொரு பகுதியாகவே தற்போது, அசாம் மாநிலம் பிரம்மபுத்திரா ஆற்றின்வடக்கு கரையில் அமைந் துள்ள “ராஜீவ் காந்தி ஓரங்தேசிய பூங்கா” என்ற பெயரிலிருந்தும் ராஜீவ் காந்தி பெயரைநீக்கிவிட்டு, வெறுமனே “ஓரங் தேசிய பூங்கா” என மாற்ற அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, சட்டமன்றத்திலேயே இதனை அறிவித்துள்ளார். பழங்குடியினர் மற்றும் தேயிலைத் தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று பெயர்மாற்றப்படுவதாக அவர் கூறியுள்ளார்.