டேராடூன்:
உத்தர்கண்ட் மாநிலத்தில் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வந்தது.
இதில் பாஜக எம்எல்ஏ முன்னாசிங் சவுகான், முதல்வர் ராவத்மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கட்சித் தலைமைக்கு புகார் கொடுத்து வந்தார். இதன் தொடர்ச்சியாக மாநிலத்தில் கட்சி நிலைமையை ஆய்வு செய்ய ராமன் சிங் தலைமையிலான பாஜகவின் மத்திய குழு டேராடூனுக்கு வந்து விசாரணை நடத்தியது. அதில் உத்தர்கண்ட் பாஜகவின் பொதுச் செய லாளர் துஷ்யந்த் கவுதமும் கலந்து கொண்டார்.இந்த குழுவினர் கட்சி நிர்வாகிகளை சந்தித்த பின்னர், தங்கள் அறிக்கையை தலைமையிடம் சமர்ப்பித்தனர். அதனைத்தொடர்ந்து கட்சியின் உத்தரவின் அடிப்படையில் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தில்லிக்குசென்று, பாஜக தேசிய தலைவர்ஜே.பி.நட்டா உள்ளிட்ட அக்கட்சி யின் மூத்த தலைவர்களை சந்தித்தார். அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்று தகவல் வெளியான நிலையில், முதலமைச் சரே விலகிய செய்தி வெளியாகியுள்ளது.
உத்தர்கண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை மாநில ஆளுநர் பேபி ராணி மவுரியாவிடம் திரிவேந்திர சிங்ராவத் அளித்தார்.பின்னர் திரிவேந்திர சிங் ராவத் செய்தியாளர்களிடம் கூறுகையில், முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை ஆளுநரிடம் சமர்ப்பித்துள்ளேன். பாஜக சட்டப்பேரவை கட்சி கூட்டம் புதனன்றுகாலை 10 மணிக்கு கட்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது என்று தெரிவித்தார்.