சென்னை, மே 14- தனியார் செக்யூரிட்டி நிறு வனத்தில் பணிபுரியும் ஊழி யர் தங்கதுரை என்பவர் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தன்னு டைய ஒரு மாத ஊதியத்தை வழங்கியுள்ளார். முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்குங்கள் என்று பொது மக்கள், சமூக அமைப்புகள் மற்றும் பெருந்தொழில் நிறு வனங்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த சில தினங்களுக்கு முன்பு வேண்டுகோள் விடுத்தார். இதுதொடர்பாக வெளி யிடப்பட்ட அறிக்கையில், பேரிடர் காலத்தில் அளிக்கக்கூடிய நன்கொடை கள் அனைத்தும் ஆக்சிஜன் உற்பத்தி, சேமிப்பு நிலை யங்கள் அமைத்தல், தடுப் பூசிகள், மருத்துவ கருவிகள் வாங்க பயன்படும். நன்கொடை விவரங்கள் மற்றும் இந்த நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட செல வினங்கள் குறித்த விவரங் கள் அனைத்தும் வெளிப் படையாக பொதுவெளியில் வெளியிடப்படும் எனக் கூறப்பட்டது. இதையடுத்து தொழிலதி பர்கள், அரசியல் கட்சியினர்,
சமூக அமைப்புகள், பொது மக்கள், சினிமா துறையினர் ஆகியோர் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்கி வருகின்றனர். இந்நிலையில் தனியார் நிறுவனத்தில் தற்காலிக இரவு நேர பணியாற்றி வரும் தங்கதுரை என்பவர் கொரோனா நிவாரண நிதி யாக தனது ஒரு மாத ஊதி யம் ரூ.10,101 வழங்கி யுள்ளார். மயிலாடுதுறையை சேர்ந்த தங்கதுரை தற்போது சென்னை சாலிகிராமத்தில் தங்கி பணியாற்றி வருகி றார். கொரோனா பொது முடக்கம் காரணமாக பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ள நிலையில் மிதிவண்டியில் வந்து முதல மைச்சரை நேரில் சந்தித்து நிதி வழங்க விரும்பியுள்ளார். அலுவல் காரணமாக அவரை சந்திக்க முடியாத தால் அரசுக் கணக்கில் அந்த பணத்தை சேர்த்துள்ளார். இந்த தகவலை அறிந்த தமிழக முதல்வர் தங்க துரையை நேரில் அழைத்து நிதி வழங்கியதற்காக தனது நன்றியை தெரிவித்தார். மேலும் புத்தகம் ஒன்றையும் அவருக்கு பரிசாக வழங்கி யுள்ளார்.