திருவள்ளூர், நவ 5- திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை யின் அரவையை உடனடியாக துவங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் திங்களன்று (நவ 4), திருவாலங்காடு கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டத்தில் கரும்பு அறுவடைக்கு தயாராகி வருகிறது. இந்த நிலையில் அரவையை உடனடியாக துவங்க வேண்டும், ஊக்கத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், அரவைத் துவங்கும் நேரத்தில் அதி காரிகளை இடமாற்றம் செய்ய கூடாது, கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5500 வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி திங்களன்று (நவ 4), காலையில் திருவலாங் காட்டில் உள்ள திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை வாயில் முன் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஸ்ரீநாத் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் மாநில பொருளாளர் சி.பெருமாள், மாநில நிர்வாக குழு உறுப்பினர் ஜெயச்சந்திரன், மாவட்ட பொருளாளர் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் ஆலை பிரச்சனைகள் குறித்து மேலாண்மை இயக்குநரை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட இயக்குநர் ஊக்கத்தொகை அடுத்த 10 நாட்களில் வழங்கப்படும் எனவும் அடுத்த ஆண்டு அரவையை அக்டோ பரில் துவக்க உரிய நடவடிக்கை எடுப்ப தாக உறுதி அளித்தார். இதனை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.