சென்னை, செப். 28- பதிவுத்துறை சார்பில் போலி ஆவணத்தை ரத்து செய்யும் அதிகாரம் பதிவுத்துறைக்கு வழங்கப்பட்டதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் புதனன்று (செப். 28) தொடங்கிவைத்தார். தொடங்கி வைக்கும் விதமாக, போலி ஆவணப்பதிவினால் பாதிக்கப் பட்ட உண்மையான சொத்து உரிமை யாளர்கள் ஐந்துபேருக்கு நில அபகரிப்பாளர்களால் மோசடியாக ஆவணப் பதிவு செய்யப்பட்டதை ரத்து செய்து அதற்கான ஆணைகளை அவர் வழங்கினார். முறையாக பரிசீலிக்காமல் உள் நோக்கத்துடன் போலி ஆவணத்தைப் பதிவு செய்தால் சம்மந்தப்பட்ட ஆவணதாரர்கள் மற்றும் பதிவு அலு வலர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்து சிறை தண்டனை வழங்கவும் சட்ட திருத்தத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. உடனடி (தட்கல்) டோக்கன் வசதி
பொதுமக்கள் தங்களின் ஆவணங்களை நல்ல நாட்கள் எனக் கருதப்படும் சில குறிப்பிட்ட நாட்களில் பதிவு செய்ய விரும்புகின்றனர். இந்நாட்களில் அதிக ஆவணங்கள் பதிவாகும் அலுவலகங்களில் டோக் கன் கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. அன்றே ஆவணம் பதியப்பட வேண்டும் என விரும்புபவர்கள் https://tnreginet.gov.in என்ற இணைய வழியாக ரூ.5,000 செலுத்தி உடனடி (தட்கல்) டோக்கன் பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அவசர ஆவணப்பதிவு தேவைப்படும் நிகழ்வுகளிலும் இவ்வசதியைப் பயன்படுத்தி உடன் டோக்கன் பெறலாம். இந்த உடனடி (தட்கல்) டோக்கன் வசதி, அதிக ஆவணங்கள் பதிவு செய்யப்படும் நூறு சார்பதி வாளர் அலுவலகங்களில் புதன் கிழமை (செப். 28) அறிமுகம் செய்யப் பட்டது. திருமணச் சான்றிதழ்களை திருத்தும் வசதி
இந்து திருமணச் சட்டம், 1955, தமிழ்நாடு திருமண பதிவுச் சட்டம், 2009, சிறப்புத் திருமணச் சட்டம், 1954, இந்திய கிறித்துவ திருமணச் சட்டம், 1874 ஆகிய திருமணப் பதிவுச் சட்டங் களின் கீழ் திருமணங்கள் பதிவு செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்படு கிறது. திருமண பதிவிற்காக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களில் கொடுக்கப்படும் விவரங்களின் அடிப்படையில் திருமண சான்று வழங்கப்படுகிறது. ஆனால் பின்னா ளில் பாஸ்போர்ட் மற்றும் வெளிநாடு செல்ல விசா கோரி விண்ணப்பிக் கும்போது சில சமயங்களில் பெயர்க ளில் ஏற்படும் பிழைகள், முகவரி போன்றவற்றில் திருத்தம் தேவைப் படுகிறது. அவ்வாறு திருத்தம் செய்திட https://tnreginet.gov.in என்ற இணையவழி விண்ணப்பித்து திருத்தப் பட்ட திருமண பதிவுச் சான்றிதழ் பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, வணிக வரி மற்றும் பதிவுத்துறைச் செயலாளர் பா.ஜோதி நிர்மலாசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.