சென்னை,அக்.13- சென்னை, மாதவரம் பால் பண்ணை மெட்ரோ நிலையத்தி லிருந்து மாதவரம் நெடுஞ்சாலை மெட்ரோ நிலையம் வரை 1.4 கி.மீ நீளத்திற்கு சுரங்கம் தோண்டும் பணியினை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம்-2 இன் கீழ், 118.9 கி.மீ நீளத்திலான 3 வழித்தடங்கள் 63,246 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசால் கொள்கையளவிலான ஒப்புதல் வழங்கப்பட்டு, ஒன்றிய அரசின் ஒப்புதல் மற்றும் நிதியுதவி பெறுவதற்காக அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. இதில், வழித்தடம் 3 – மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரை (45.8 கி.மீ), வழித்தடம் 4 – கலங்கரைவிளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரை (26.1 கி.மீ) மற்றும் வழித்தடம் 5- மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை (47.0 கி.மீ) ஆகிய 3 வழித் தடங்கள் ஆகும். ஒன்றிய அரசின் ஒப்புதல் பெறப் படும் வரை தற்காலிகமாக மாநில அரசு திட்டமாகக் கருதி இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை 52.01 கி.மீ வழித்தடப்பகுதிக்கும், ஆசிய மேம் பாட்டு வங்கி, ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி மற்றும் புதிய மேம்பாட்டு வங்கி ஆகியவை எஞ்சி யுள்ள 66.89 கி.மீ வழித்தடப்பகுதிக் கும் நிதியுதவி வழங்குகின்றன. மாதவரத்திலிருந்து தரமணி வரையிலான (26.7 கி.மீ) சுரங்கப் பாதை வழித்தடப்பகுதி தமிழ்நாடு அரசு நிதியுதவியுடன் செயல்படுத் தப்படுகிறது.
இதில் இரண்டு சுரங்கப் பாதை அமைப்பதற்கான ஒப்பந்தங் கள் வழங்கப்பட்டு கட்டுமானப் பணிகள் துவங்கியுள்ளன. மாதவரம் பால் பண்ணையிலி ருந்து கெல்லீஸ் வரையில் 9 கி.மீ நீளத்திற்கு சுரங்கப்பாதை தோண் டும் பணி மற்றும் சுரங்கப்பாதை மெட்ரோ நிலையங்களுக்கான தடுப்பு சுற்று சுவர்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட வுள்ளன. சுரங்கப்பாதை மெட்ரோ நிலையங்களுக்கான சுற்றுத் தடுப்புச் சுவர்கள் அமைத்தல் மற்றும் சுரங்கப்பாதைக்கான கான்கீரிட் வார்ப்புகள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மாதவரம் பால்பண்ணையிலிருந்து சுரங்கம் தோண்டும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு, கே.ஆர். பெரியகருப்பன், பி.கே. சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கே. ஜெயக் குமார் எம்.பி , சட்டமன்ற உறுப்பினர் கள் எஸ். சுதர்சனம், துரை சந்திர சேகர், துணை மேயர் மு. மகேஷ் குமார், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ. சித்திக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.