districts

கடன் வழங்க லஞ்சம் வாங்கிய தாட்கோ ஊழியர் கைது

விழுப்புரம், நவ. 4- கறவை மாடு கடன் வழங்க ரூ.10  ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாட்கோ அலுவலக பதிவறை எழுத்தர் கைது  செய்யப்பட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கரா புரம் தாலுகா வடபொன்பரப்பி கிராமத்தை சேர்ந்தவர் குணசீலன் (27). இவருடைய மனைவி பாரதி,  அப்பகுதியில் காமராஜர் பெயரில் நடத்தி வரும் மகளிர் சுய உதவிக் குழுவில் உறுப்பினராக உள்ளார். இவர் தனக்கும், தன்னுடன் உறுப்பினராக இருக்கும் 13 பேருக்கும் தாட்கோ மூலம் கறவை  மாடு கடன் பெறுவதற்காக கடந்த  ஒரு மாதத்திற்கு முன்பு விழுப்புரம்  தாட்கோ மாவட்ட மேலாளர்  அலுவலகத்தில் விண்ணப்பித் திருந்தார். அதற்காக சில முக்கிய ஆவணங்களையும் அவர்கள் 14 பேரும் தங்கள் விண்ணப்பத்துடன் இணைத்திருந்தனர். இந்த ஆவணங்களை சரிபார்த்து  கறவை மாடு கடன் வழங்குவதற் காக தாட்கோ மாவட்ட மேலாள ருக்கு பரிந்துரை செய்வதற்காக அங்குள்ள அலுவலகத்தில் பதிவறை எழுத்தராக பணியாற்றி வரும் விழுப்புரம் அருகே ராம்பாக்கத்தை சேர்ந்த சுரேஷ்குமார் (35) என்பவர் ஒவ்வொருவரிடமும் தலா ரூ.1,000 வீதம் மொத்தம் ரூ.14 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த உதவிக்குழுவினர், தாங்கள் ஏழ்மை யான குடும்பத்தை சேர்ந்தவர்கள், தங்களிடம் அவ்வளவு பணம் இல்லை என்றும் எப்படியாவது கறவை  மாடு கடன் வழங்கும்படியும் கூறி யுள்ளனர். அதற்கு ரூ.4 ஆயிரத்தை குறைத்துக்கொண்டு ரூ.10 ஆயிரம் தரும்படியும், பணம் கொடுத்தால் மட்டுமே கறவை மாடு கடன் தர முடி யும் என கறாராக கூறிய சுரேஷ்குமார்,  அந்த பணத்தை அலுவலகத்திற்கு வந்து தன்னிடம் நேரில் கொடுக்கும் படி கூறினார். லஞ்சம் கொடுக்க விரும்பாத பாரதி இதுகுறித்து தனது கணவர் குணசீலனிடம் தெரிவித்தார். உடனே  அவர், விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் செய்தார். அதன் பேரில் காவல் துறையினர் வழங்கிய  ரசாயன பொடி தடவிய பணத்தை குணசீலன் சுரேஷ்குமாரிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் சுரேஷ் குமாரை கையும், களவுமாக பிடித்த னர். பின்னர் அவர் மீது வழக்குப் பதிவு  செய்து, அவரை கைது செய்தனர்.