districts

img

தொழிற்சங்க தேர்தலில்  எஸ்.கே.மகேந்திரன் அணி வெற்றி

சென்னை, ஜூலை 17 - கார்போராண்டம் யுனிவர்சல் தொழிற்சாலை தேர்தலில் சிஐடியு வடசென்னை மாவட்டத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன் தலைமையிலான அணி பெருவாரியான இடங்களை கைப்பற்றியது. சென்னை திருவொற்றியூரில் கார்போரண்டம் யுனிவர்சல் தொழிற்சாலை உள்ளது. இங்கு 195 தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இந்த தொழிற்சாலையில் சனிக்கிழமையன்று (ஜூலை 16) தொழிற்சங்க தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் 2 அணிகள் போட்டியிட்டன. இதில் எஸ்.கே.மகேந்திரன் தலைமையிலான தொழிலாளர் நல அணி 5 இடங்களில் வெற்றி பெற்றது. தலைவராக எஸ்.கே.மகேந்திரன், பொதுச் செயலாளராக கே.நாராயணன், பொருளாளராக சி.விஜயகுமார், துணைத் தலைவராக இ.சீனிவாசன், துணைச் செயலாளராக ஜி.சரவணன் ஆகியோர் வெற்றி பெற்றனர். எதிரணியினர் 2 இடங்களில் வெற்றி பெற்றனர்.