districts

img

கல்வி வளாகங்களில் பாலியல் புகார் குழுக்கள் மாணவிகள் மாநாடு கோரிக்கை

சென்னை, ஏப். 15 - கல்வி வளாகங்களில் பாலியல் வன்கொடு மைகள் தொடர்பாக புகார் அளித்த ஐசிசி குழுவை உருவாக்க வேண்டும். அதில்  மாணவர் பிரதிநிதிகள் இடமளிக்க வேண்டும்  என்று இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. மாணவர் சங்கம் மத்திய சென்னை மாவட்ட மாணவிகள் மாநாடு வியாழனன்று (ஏப்.14) கேரள சமாஜம் பள்ளியில் நடை பெற்றது. இந்த மாநாட்டில், கல்வி வளாகங்க ளில் தண்ணீர், கழிவறை வசதி ஏற்படுத்துவ தோடு, சானிட்டரி நாப்கின் வழங்கும் மற்றும்  எரிக்கும் இயந்திரங்களை வைக்க வேண்டும்.  பாலின சமத்துவம் குறித்த புரிதலை ஏற்படுத்த  குழுக்களை ஏற்படுத்த வேண்டும். விண்ணப்பங்களில் ஆண் பெண் மட்டு மின்றி அனைத்து பாலின குறியீடுகளையும் பதிவு செய்வதற்கான வசதி செய்ய வேண் டும், உடை கட்டுப்பாடு என்ற பெயரால் ஆடை  சுதந்திரத்தில் தலையிடுவதை கைவிட வேண்டும், மாணவிகள் விடுதிகளை அதி கரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டிற்கு மாவட்ட துணைத்தலைவர் யுக சாந்தி தலைமை தாங்கினார். காரல்  சே வரவேற்றார். சாருவர்தா சங்க கொடியை  ஏற்றினார். மாவட்டச் செயலாளர் லோ.விக் னேஷ் தொடங்கி வைத்தார். மாவட்டத் தலை வர் மிருதுளா அறிக்கையை முன்மொழிந் தார். இணைச் செயலாளர் சங்கரய்யா தீர்மா னங்களை முன்மொழிந்தார். ஊடகவிய லாளர் கவிதா முரளிதரன், சமூக செயல் பாட்டாளர் கிரேஸ் பானு உள்ளிட்டோர் பேசினர். மாணவர் சங்க மத்திய குழு  உறுப்பினர் ரா.ஜான்சி நிறைவுரையாற்றி னார். அனுஷ்யா நன்றி கூறினார். மாணவிகள் உபக்குழு ஒருங்கிணைப் பாளராக காரல் சே தேர்வு செய்யப்பட்டார்.