கடலூர், ஜன.3- பெண்ணாடம் ரயில் நிலையத்தில் சிபிஎம் மக்களவை உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் நேரில் ஆய்வு மேற்கொண்டார். ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற அதிகாரி களிடம் வலியுறுத்தினார். பெண்ணாடத்தில் இருந்து தினசரி 1000க்கும் மேற்பட்டவர்கள் வெளியூருக்கு பயணம் செய்யும் நிலையில், பெண்ணாடம் ரயில் நிலை யத்தில் பல ரயில்கள் நின்று செல்லாததால் விருத்தாச்சலம் சென்று ஏற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பெண்ணாடம் வழியாக செல்லக்கூடிய அனைத்து ரயில்களும் நின்று செல்வதற்கும் ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்திட வேண்டும், குறிப்பாக ஏற்கெனவே நின்று சென்ற ராக்போர்ட் மற்றும் பல்லவன் வைகை, ராமேஸ்வரம், மங்களூர், கொல்லம் வாராந்திர விரைவு ரயில்கள், அனந்த புரி, கன்னியாகுமரி, புதுச்சேரி, ஹௌரா, நிஜா முதீன் உள்ளிட்ட ரயில் களை நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். மதுரை - விழுப்புரம் விரைவு வண்டி தாழ நல்லூர் ரயில் நிலை யத்தில் ஏற்கெனவே நின்று சென்றது. மீண்டும் தாழ நல்லூரில் ரயில் நின்று செல்வதற்கும் ஏற்பாடு செய்திட வேண்டும். பெண்ணாடம் ரயில் நிலையம் செல்ல ஆக்கிர மிப்புகளை அகற்றி முறை யான பாதை வசதி உரு வாக்கிட வேண்டும். மேலும் இரண்டு ரயில்வே பாதைகளை உருவாக்கிட ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். பெண்ணாடம் மேம் பாலலத்தில் படிக்கட்டில் கைப்பிடி அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும், ரயில்வே மேம்பாலத்தில் விரைந்து மின்விளக்குகள் பொருத்த வேண்டும், போக்கு வரத்தை முறைப்படுத்த ஒரு வழி பாதையாக மாற்ற வேண்டும், குடிநீர், கழிப்பறை வசதிகள் செய்து தரவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து சிபிஎம் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகிறது. எம்.பி ஆய்வு இந்த நிலையில் இந்த கோரிக்கைகள் குறித்து மனுவாக நாடாளு மன்ற உறுப்பினர் சச்சி தானந்தத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஏற்கெனவே ரயில்வே அதி காரிகளுடன்பேசி உள்ள நிலையில், பெண்ணாடம் ரயில் நிலையத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். பெண்ணாடம் வர்த்தக சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கை மனு அளிக்கப் பட்டது. இந்நிகழ்ச்சியில் சிபிஎம் மாவட்ட செயலாளர் கோ.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.ஆர்.ரவிச்சந்திரன், திட்டக்குடி செயலாளர் அன்பழகன், மாவட்ட குழு உறுப்பினர் முத்துலட்சுமி, கூட்டுறவு சங்க மாநில செயலாளர் ஜீவானந்தம், பேருராட்சி உறுப்பினர் விஸ்வநாதன், நகர செயலாளர் அரவிந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ரயில்வே அதிகாரிகள் சார்பில், முதுநிலை வணிக மேலாளர் ரதிப்பிரியா, பொறியாளர் கார்த்திக் பாலாஜி, ரயில் நிலைய அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். அடிப்படை மற்றும் பாது காப்பு வசதிகளை விரை வில் நிறைவேற்றுவதாக அதி காரிகள் உறுதியளித்தனர்.