districts

img

திருவிழாக்கால வியாபாரிகளுக்கு ரூ. 7,500 நிவாரணம் வழங்க கோரிக்கை

சென்னை, செப். 9- பெருநகர சென்னை மாநகராட்சி சிறு கடை மற்றும் சாலையோர வியாபாரிகள் சங்  கத்தின் வடசென்னை மாவட்ட அமைப்பு  பேரவை கூட்டம் பழைய வண்ணாரப் பேட்டையில் நடைபெற்றது. சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆர்.ஜெய ராமன் தலைமை தாங்கினார்.  செயல் அறிக் கையை ஏ.கே.ஷாஜகான் சமர்ப்பித்தார். திரு விழாக்கால வியாபாரிகள் சங்கத் தலைவர் ராஜா, எம்.சி. ரோடு வியாபாரிகள் சங்க தலை வர் பலராமன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.  சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.கே. மகேந்திரன் நிறைவுயாற்றினார். முன்னதாக தங்கசாலை வியாபாரிகள் சங்க செயலாளர் யூசுப்கான் வரவேற்றார். திருவிழாக்கால வியாபாரிகளுக்கு கொரோனா நிவாரண நிதி 7,500 ரூபாய்  வீதம் 6 மாதத்திற்கு வழங்க வேண்டும், அடை யாள அட்டை வழங்க வேண்டும், சாலை யோர வியாபாரிகளை அப்புறப்படுத்தாமல் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் அதே பகுதியில் வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய  மாவட்ட தலைவராக ஆர்.ஜெய ராமன், செயலாளராக  ஏ.கே.ஷாஜகான், பொருளாளராக ஹரி உள்ளிட்ட 11 பேர்  தேர்வு செய்யப்பட்டனர்.  இதில்  வடசென்னை  மாவட்டம் முழுவதிலும் இருந்து சிறுகடை வியாபாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிறைவாக கே.செல்வானந்தம் நன்றி கூறினார்.