சென்னை, ஜூலை 3- சென்னையில் எங்கெங்கு ரோப் கார் திட்டத்தை அமல்படுத்த லாம் என்று ஆய்வு செய்யப்பட்டது. அதில் மெரினா கடற்கரையில் ரோப் கார் இயக்கினால் சுற்றுலா பயணிகளை கவ ரும் வகையில் இருக்கும் என்று சென்னை மாநக ராட்சி அதிகாரிகளும், பொறி யாளர்களும் முடிவுக்கு வந்துள்ளனர். சமீபத்தில் அமைச்சர் கே.என்.நேரு சென்னை மாநகராட்சி கவுன்சி லர்களை சந்தித்து பேசிய போது, புதிய திட்டங்கள் குறித்து ஆலோசனை தெரி விக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதை ஏற்று சில கவுன்சிலர்கள் ரோப் கார் திட்டம் பற்றி தெரிவித்தனர். இதை யடுத்து மெரினா கடற் கரையில் ரோப் கார் திட்டத்துக்கு விரிவான பரிந்துரை தமிழக அரசி டம் தாக்கல் செய்யப் பட்டுள்ளது. மெரினா கடற்கரையில் அமையும் ரோப் கார் திட்டம் நேப்பியர் பாலத்தில் இருந்து நம்ம சென்னை செல்பி பாய்ண்ட் வரை அமைக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த இரு இடங்களுக்கும் இடையே உள்ள தொலைவு 3 கி.மீ. ஆகும். 3 கி.மீட்டருக்கு ரோப் காரில் செல்லும்போது சுற்றுலா பயணிகளுக்கு வித்தியாசமான அனுபவ மாக இருக்கும். இதை தவிர நேப்பியர் பாலத்தில் இருந்து ராய புரம் ரயில் நிலையம் பகுதி வரை ரோப் கார் இயக்கும் திட்டத்துக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அடையாறு ஆற்றின் மீது ரோப் கார் இயக்கும் திட்ட மும் உள்ளது. இவற்றில் முதலில் எந்த திட்டத்துக்கு அனுமதி கொடுப்பது என்பது பற்றி தமிழக அரசு ஆய்வு செய்து வருகிறது.