districts

img

வெள்ள தடுப்புச்சுவர் வெள்ளாற்றில் அமைத்திடுக

 சிதம்பரம், அக் 16- வெள்ளாற்றில் வெள்ளத் தடுப்புச்சுவர் அமைக்கவேண்டும் என்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கீரப்பாளையம் ஒன்றிய மாநாடு வலியுறுத்தியுள்ளது.  மாநாட்டில் கட்சி கொடியை மூத்த  உறுப்பினர்  ஜி.கலிய பெரு மாள்  ஏற்றி  வைத்தார்.  நெடுஞ்சேரலாதன்,  செம்மலர் ஆகியோர்  தலைமை வகித்தனர்.   அஞ்சலி தீர்மானத்தை சிவராமன் வாசித்தார்.   முருகன் வரவேற்றார்.   மாநிலக் குழு  உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு மாநாட்டை  துவக்கி  வைத்து  பேசினார். வேலை  அறிக்கையை  ஒன்றியச்  செயலாளர்  ஏ.செல்லையா,  வரவு -செலவு அறிக்கையை குண சேகரன் ஆகியோர் சமர்ப்பித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.ராமச்சந்திரன், மாவட்டக் குழு உறுப்பினர் பழ. வாஞ்சிநாதன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.  மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.சுப்ப ராயன் மாநாட்டை முடித்து வைத்து பேசினார். புதிய ஒன்றியக்குழு தேர்வு  13 பேர் கொண்ட ஒன்றிய குழுவின் செயலாளராக  ஏ.செல்லையா  தேர்வு செய்யப்பட்டார்.   தீர்மானங்கள் பல ஆண்டுகளாக புறம்போக்கு இடத்தில் குடியிருக்கும்  அனைவருக்கும்  குடிமனை  வழங்க  வேண்டும்.  கீரப்பாளையம்  முதல் அள்ளூர் வரை வெள்ளாற்று கரையோரம் வெள்ள தடுப்புச் சுவர்  அமைக்க வேண்டும்.   100 நாள்  வேலைத் திட்டத்தில்  பாரபட்சமின்றி   அனைவருக்கும் வேலை அட்டை வழங்க வேண்டும்.   சம்பள  பாக்கியை  உடனே  வழங்க  வேண்டும்  உள்ளிட்ட பல தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டன.