districts

img

ஓட்டேரி குக்ஸ் சாலை கடைகளை முறைப்படுத்தி அடையாள அட்டை வழங்குக

சென்னை, நவ. 5- ஓட்டேரி குக்ஸ் சாலை கடைகளை முறைப்படுத்தி அடையாள அட்டை வழங்க வேண்டும் என சென்னை மாவட்ட சாலை யோர சிறுகடை விற்பனை யாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாவட்டச் செயலாளர் டிவெங்கட் தலைமையில் மண்டலம் 6 விற்பனைக் குழு தலைவர் முருகனிடம் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், கடந்த 26ஆம் தேதி சாலையோர வியாபாரிகளுக்கான நகர விற்பனை குழு கூட்டத்தில், ஓட்டேரி குக்ஸ் ரோடு சிறுகடை வியா பாரிகளை ஸ்டீபன்ஸ் சாலைக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிகிறோம். ஸ்டீபன்சன் சாலை மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதி. ஏற்கெனவே வியாபாரம் செய்து கொண்டிருக்கும் இடத்திலேயே தொடர்ந்து வியாபாரம் செய்வதற்கு அனுமதி அளித்து, அடை யாள அட்டை வழங்க வேண்டும் என அந்த மனு வில் கூறப்பட்டுள்ளது. இதில் சிபிஎம் திருவிக நகர் பகுதி செயலாளர் வி.செல்வராஜ், நகர் விற்ப னைக் குழு உறுப்பினர்கள் மோனிஷா, கண்ணன், நாகபூஷ்ணம், பாலமுரு கன், ஜெனிபர், குக்ஸ் ரோடு சங்க நிர்வாகிகள் சரவணன், லோகநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.