districts

img

கொரட்டூரில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்

சென்னை, அக். 15- சென்னையில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழை, மற்றும் புயல் காரணமாக குடியிருப்புப் பகுதிகள், அரசுக் கட்டிடங்கள் மழைநீரால் சூழப்பட்டுள்ளன. அம்பத்தூர் கொரட்டூர் குடியிருப்புப் பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரால் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர். தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, கொரட்டூர் ஆவின் பிரதான சாலை என பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் குடியிருப்பு வாசிகளின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப் பட்டதுடன், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத் திற்கு உள்ளாகியுள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகை யில், எப்போது கனமழை பெய்தாலும் இதே நிலைதான். குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் இரவு நேரங்களில் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் குடியிருப் புகளுக்குள் வந்து விடுமோ என்ற அச்சத்தில் இருக்கிறோம். பலர் கைக் குழந்தைகளை வைத்துக்கொண்டு அவதிப் படுகின்றனர். எனவே மாநகராட்சி நிர்வாகம் மழை நீர் கால்வாய்களை தூர் வாரி முறையாக பராமரிக்க வேண்டும், மழைநீர் வடிகால் இல்லாத பகுதிகளில் புதிதாக மழைநீர் வடி கால்வய்களை அமைக்க வேண்டும். அதேபோல் மழைக்காலங்களில் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள  கழிவு நீர், ரசாயனம் கலந்த நீர் கொரட்டூர் ஏரியில் விடப்படுகிறது.  இதனால் நிலத்தடி நீர் மாசடைவதுடன், மீன்களும் செத்து மிதக் கின்றன. எனவே அவற்றை தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.