சென்னை, மார்ச் 17 - சென்னை மாநகராட்சி பகுதிகளில் 9.81 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடை பெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வியாழனன்று (மார்ச் 17) ஆய்வு செய்தார். கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழையால் சென்னை மாநகரம் கடும் பாதிப்புக்கு உள்ளானது. மழை வெள்ள பாதிப்புகளில் இருந்து நிரந்தர தீர்வு காண ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் ‘வெள்ள மேலாண்மை குழு’ அமைக்கப்பட்டது. பருவமழைக் காலங்க ளில் வெள்ளப் பாதிப்புகள் ஏற்படாத வகையில், அதிக அளவில் நீர் தேங்கிய இடங்களில் மழைநீர் வடி கால் அமைக்க முதலமைச்சர் நிதி ஒதுக்கினார். அதன டிப்படையில், பல்வேறு இடங்களில் மழைநீர் வடி கால்வாய் அமைக்கப்பட்டு வருகிறது. அந்தப்பணிகளை முதலமைச்சர் பார்வை யிட்டார். 58ஆவது வட்டம், வேப்பேரி நெடுஞ்சாலையில் 750 மீட்டர் நீளத்திற்கு 1.80 கோடி ரூபாய், 73 ஆவது வட்டம், புளியந்தோப்பு நெடுஞ்சாலையில் 790 மீட்டர் நீளத்திற்கு 3.20 கோடி ரூபாய், 74ஆவது வட்டம் பெரம்பூர் நெடுஞ்சாலை தெற்குப் பகுதியில், 880 மீட்டர் நீளத்திற்கு 3.70 கோடி ரூபாய், மயிலாப்பூர் ரயில் நிலையம் அருகில் 126ஆவது வட்டம் ராமாராவ் சாலையில் 500 மீட்டர் நீளத்திற்கு 38 லட்சம் ரூபாய், 123ஆவது வட்டம், தேவநாதன் தெருவில் 300 மீட்டர் நீளத்திற்கு 73 லட்சம் ரூபாய் மதிப்பீடுகளில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்தார். அப்போது பணி களை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு உத்தர விட்டார். இந்நிகழ்வின்போது அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தயாநிதி மாறன் எம்.பி., சட்ட மன்ற உறுப்பினர்கள் இ.பரந்தாமன், தாயகம் கவி, த.வேலு, மாநகர மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ் குமார், மாமன்ற உறுப்பினர்கள் ராஜேஸ்வரி, அம்பேத்வளவன் (எ) குமாரசாமி, மோ.சரஸ்வதி, அமிர்த வர்ஷினி, கி.மதி வாணன், மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி, சென்னை பெருநகர் குடிநீர் வடிகால் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் சி.விஜயராஜ் குமார் உள்ளிட் டோர் உடனிருந்தனர்.