districts

img

பேராவூரணியில் ரயில்வே பாலப்பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை

தஞ்சாவூர், நவ.10-  தஞ்சை மாவட்டம் பேராவூரணியிலி ருந்து ஆத்தாளூர் செல்லும் வழியில் உள்ள  ஆண்டவன் கோயில், எல்.சி.117 ரயில்வே  அருகே, கீழ்மட்டப் பாலம், சுமார் 300 மீட்டர்  அளவுக்கு அமைக்கும் பணி கடந்த 5 மாதங்  களாக நடைபெற்று வருகிறது.  ஆத்தாளூர், நாடாகாடு, முனிக் கோவில் பாலம், பூக்கொல்லை, முடச்சிக் காடு, கழனிவாசல் பகுதியைச் சேர்ந்த  பொதுமக்கள் இந்த வழியை பயன்படுத்தி  வருகின்றனர். மேலும், இந்தப் பகுதி களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள், பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர்.  இவர்கள் பள்ளிக்கு வருவதற்கு சுமார்  மூன்று கிலோமீட்டர் தூரம், போக்குவரத்து நெரிசலில் சிக்கி சுற்றி வர வேண்டிய சூழ்  நிலை உள்ளது.  மேலும், இவ்வழியே ஆத்தாளுர் வீர மாகாளி அம்மன் கோவில் உள்ளது. கோயி லுக்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழ மைகளில் ஏராளமானோர் வந்து தரிசனம் செய்வது வழக்கம். தற்போது பாலம் கட்டு மான வேலை நடைபெற்று வருவதால் கோவிலுக்கு செல்ல முடியாமல் பக்தர் கள் அவதிப்பட்டு வருகின்றனர்.  ஆத்தாளூர் கிராமத்திலிருந்து பேராவூ ரணி நகர் பகுதியில் மளிகை பொருள் மற்றும் காய்கறிகள் வாங்க 3 கிலோமீட்டர் சுற்றிவர வேண்டிய நிலை உள்ளது என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எனவே, பாலப்பணியை விரைந்து  முடிக்க வேண்டும், மழைக்காலங்களில் பாலத்தின் கீழ் தண்ணீர் தேங்காதவகை யில், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும் என, ஆத்தா ளூர் பொதுமக்கள் சார்பில், சமூக ஆர்வலர் க.ராஜரெத்தினம் ரயில்வேத் துறை அதி காரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.