பாபநாசம், அக்.30- தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தங்கள் வயலில் அறுவடை பணிகளை விரைந்து முடித்திடுமாறு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். வடகிழக்கு பருவமழை 2022 நவம்பர் மாதம் முதல் வாரத்தில் தீவிரமாக துவங்கவுள்ளதால், குறுவை அறு வடை நிலை பயிர்களை உடன் விரைந்து அறுவடை செய்து, பருவ மழையின் பாதிப்பிலிருந்து பயிர்களை காத்துக் கொள்ளலாம். மேலும் வடகிழக்கு பருவ மழை துவங்குமுன், தங்கள் நிலங்களில் வடிகால் வசதிகள் சரியாக இருக்கின்றனவா என விவசாயிகள் தங்கள் கிராம அளவில் ஒருங்கிணைந்து வடிகால் வசதிகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் நவம்பர் 1 அன்று நடைபெறவுள்ள சிறப்பு கிராம சபை கூட்டங்களில் விவசாயிகள் தவறாது கலந்து கொண்டு விவசாய சாகுபடி நிலங்களுக்கான உரிய வடி கால் வசதிகளை ஆலோசித்து பணிகளை ஒருங்கி ணைந்து மேற்கொள்ளலாம்.