தஞ்சாவூர், மே 1 - தமிழ்நாட்டில் சாலை விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க இன்னுயிர் காக்கும் திட்டம் - நம்மைக் காக்கும்-48 என்ற சீரிய திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் துவக்கி வைத்துள்ளார். இந்த திட்டத்தின்கீழ் தஞ்சாவூர் மாவட்டத்தில் சாலை விபத்துகளில் பாதிக் கப்படுவோர், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்து வமனை உள்ளிட்ட 6 அரசு மருத்துவமனைகள் மற்றும் 19 தனியார் மருத்துவமனை களிலும் அனுமதிக்கப்பட்ட 48 மணி நேரத்திற்குள் விபத்தில் பாதிக்கப்பட்ட வரின் உயிரைக் காக்க மேற் கொள்ளப்படும் சிகிச்சை மற்றும் பரிசோதனை களுக்காக ரூ.1 லட்சம் வரை கட்டணம் ஏதுமின்றி இலவச மாக சிகிச்சை அளிக்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற சாலை விபத்து களில் பாதிக்கப்பட்ட நபர் மருத்துவமனைகளில் அனு மதிக்கப்பட்ட 4 மணி நேரத்திற்குள் நோயாளி அனு மதிக்கப்பட்டுள்ள மருத்து வமனை நிர்வாகத்தின் சார்பாக Emergency Inti mation (E.1.No.) அவசர தகவல் எண் பெறப்பட வேண்டும். அதன்பிறகு 7 மணி நேரத்திற்குள் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்றுவரும் நோயாளியின் புகைப்படம் உள்ள ஏதேனும் ஒரு அடை யாள அட்டையை மருத்துவ மனை நிர்வாகத்திடம் ஒப்ப டைக்க வேண்டும். அதனைப் பெற்ற பின் மருத்துவமனை நிர்வாகம் நோயாளிக்கு சிகிச்சை அளித்ததற்கு உரிய கட்டணத்திற்கான விண்ணப்பத்தினை ஆன் லைன் மூலம் இன்சூரன்ஸ் கம்பெனிக்கு சமர்ப்பித்து சிகிச்சைக்கான தொகையை இன்சூரன்ஸ் கம்பெனி மூலம் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டோர் கட்டணம் ஏதுமின்றி அவர்க ளது உயிர் காக்கும் சிகிச் சையை அளிக்க அரசு உரு வாக்கியுள்ள இத்திட்டத் தினை பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறலாம் என்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன் ராஜ் ஆலிவர் தெரிவித்துள் ளார்.