districts

img

தரமான தளவாடப் பொருட்களை வழங்குக! மின் ஊழியர் சங்க மாநாடு கோரிக்கை

சென்னை, மே 29 - நுகர்வோருக்கு சிறப்பான சேவை வழங்க தரமான தளவாட பொருட்களை மின்வாரியம் வழங்க வேண்டும் என்று மின் ஊழியர்கள் வலி யுறுத்தி உள்ளனர். தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் தென்சென்னை திட்ட கிளை-2ன் மாநாடு ஞாயிறன்று (மே 29) கிண்டியில் நடை பெற்றது. இந்த மாநாட்டில், பிபி-2 சுற்றறிக்கையை திரும்ப பெற வேண்டும், பணி யிடங்களில் பாலியல் புகார் கமிட்டிகளை அமைக்க வேண்டும், ஒப்பந்த ஊழி யர்களை அடையாளம் கண்டு உடனடியாக தினக்  கூலி வழங்க வேண்டும், பகுதிநேர ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், காலிப் பணி யிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டிற்கு கிளை யின் பொறுப்பு தலைவர் எம்.தண்டபாணி தலைமை தாங்கினார். தாம்பரம் கோட்டச் செய லாளர் பா.டில்லி குமார் வரவேற்றார். சிஐடியு முன்னாள் மாவட்டச் செயலாளர் எஸ்.அப்பனு சங்க கொடியேற்றினார். பி.கவுதமன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். தெற்கு மண்டலச் செய லாளர் ஏ.முருகானந்தம் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். கிளை செயலாளர் டி.அன்பழகன் செயலாளர் அறிக்கையையும், பொரு ளாளர் ஜி.ரவி வரவு செலவு அறிக்கையும் சமர்ப்பித்தனர். சிஐடியு தென்சென்னை மாவட்டச் செயலாளர் பா.பாலகிருஷ்ணன், பொரு ளாளர் ஏ.பழனி, மத்திய அமைப்பின் தென்சென்னை கிளை-1ன் செயலாளர் டி.பண்டாரம்பிள்ளை, பொறியாளர் அமைப்பின் மாநில பொருளாளர் கே.ஆதன்இளங்கீரன், ஓய்வு பெற்றோல் நல அமைப்பு-1ன் தலைவர் வி.பங்குனியான் உள்ளிட்டோர் பேசினர். மாநில இணைச் செய லாளர் எம்.தயாளன் நிறை வுரையாற்றினார். என்.பிரபுதேவா நன்றி கூறினார். கிளையின் தலை  வராக எம்.தண்டபாணியும், செயலாள ராக பி.கவுத மனும், பொருளாளராக இ.முருகனும் தேர்வு செய்யப்பட்டனர்.