districts

img

சாலை விபத்தில் இறந்தாலும் நிவாரண நிதியை வழங்க வேண்டும் ஏசி, பிரிட்ஜ் பழுதுபார்ப்போர் சங்க மாநாடு கோரிக்கை

சென்னை, பிப். 19 - பணியின் போது சாலை விபத்தில் இறந்தாலும் நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. மெட்ராஸ் ஏர்கண்டிஷனிங் அண்டு ரெப்ரிஜிரேஷன் ஸ்மார்ட் டெக்னீஷியன்ஸ் யூனியனின் (சிஐடியு) முதலாவது மாநாடு ஞாயிறன்று (பிப்.19) தி.நகரில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், கட்டுமான நலவாரியத்தின் வாயிலாக வழங்கப்படும் விபத்து நிவாரண நிதியை 5 லட்சம் ரூபாயிலிருந்து 10 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும். தொழிலாளர்களுக்கு நவீன தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சியை வாரியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. சங்கத்தின் தலைவர் எஸ்.முகமது ரபி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் இ.ரவி வரவேற்றார். மூத்த தொழிற்சங்கத் தலைவர் டி.கே.ரங்கராஜன் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். சிஐடியு தென்சென்னை மாவட்டச் செயலாளர் பா.பாலகிருஷ்ணன், பொருளாளர் ஏ.நடராஜன், சமூக செயற்பாட்டாளர் சுதீர்,  சங்கத்தின் செயலாளர் பி.மகேஷ், பொரு ளாளர் அகோரம் உள்ளிட்டோர் பேசி னர். இணைச் செயலாளர் வி.சதீஷ் நன்றி கூறினார்.