சென்னை, மே 29 - கட்டுமான தொழிலா ளர்கள் வீடு கட்ட நல வாரியம் 4 லட்சம் ரூபாய் கடன் வழங்குகிறது. அதே போன்று, ஆட்டோ ஓட்டு நர்களுக்கும் வழங்க வேண் டும் என்று ஓட்டுநர்கள் கோரி க்கை விடுத்துள்ளனர். ஆட்டோ டாக்சி தொழி லாளர் சங்கத்தின் மத்திய சென்னை மாவட்ட 16வது மாநாடு சனிக்கிழமையன்று (மே 28) சிந்தாதரிப்பேட்டை யில் நடைபெற்றது. அரசு பொது மருத்துவ மனை, வணிக வளாகங்கள், திரையரங்குகளில் ஆட்டோ க்களை நிறுத்த அனுமதிக்க வேண்டும். ஓலா, உபேர் போன்றவற்றிற்கு மாற்றாக தமிழக அரசு செயலி ஒன்றை (ஆட்டோ ஆப்) தொடங்க வேண்டும். தேர்தல் வாக்குறு தியில் கூறியதுபோன்று, புதிய ஆட்டோக்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்க வேண்டும். ஆன் லைன் முறையில் அபராதம் விதிப்பதை கைவிட வேண்டும். சாலைப் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தக் கூடாது. சிறு குற்றங்களுக்கு ஓட்டு நர் உரிமத்தை பறிக்கக் கூடாது. அரசு அறிவித்த வாறு இலவச ஜிபி எஸ் மீட்டரை பொறுத்த வேண்டும். ஆட்டோ மீட்டர் கட்டணத்தை 1.5 கிலோ மீட்டருக்கு 50 ரூபாய், அடுத்தடுத்த ஒவ்வொரு கிலோ மீட்ட ருக்கும் 25 ரூபாய், காத்திருப்பு கட்டணமாக நிமிடத்திற்கு 1 ரூபாய் என நிர்ணயிக்க வேண்டும். ஓய்வூதியத்தை 5ஆயிரம் ரூபாயாக அதிகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் ஆர்.கபாலி தலைமை தாங்கினார். சிஐடியுகொடியை கே.பச்சையப்பன் ஏற்றினார். எஸ்.சிவக்குமார் வரவேற்க, பி.சீனிவாசன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். தமிழ்நாடு ஆட்டோ தொழி லாளர் சம்மேளன தலை வர் வி.குமார் மாநாட்டை தொடங்கி வைத்து பேசி னார். வேலை அறிக்கையை மாவட்ட பொதுச் செயலாளர் எஸ்.பாலசுப்பிரமணியமும், வரவு செலவு அறிக் கையை பொருளாளர் கே.பிர பாகரனும் சமர்ப்பித்தனர். சாலையோர வியாபா ரிகள் சங்கத் தலைவர் எம்.வி.கிருஷ்ணன், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய பொதுச் செயலாளர் எம்.பழனி, கட்டுமான சங்க மாவட்டச் செயலாளர் எம்.உதயகுமார், ஆட்டோ டாக்சி ஓட்டுநர் சங்க தென்சென்னை மாவட்டத் தலைவர் ெஜ.முகமது அனிபா உள்ளிட்டோர் மாநாட்டை வாழ்த்தி பேசினர். சிஐடியு மத்திய சென்னை மாவட்டத் தலை வர் எம்.சந்திரன் நிறைவுரை யாற்றினார். என்.சி.ஆபிர காம்தாமஸ் நன்றி கூறினார். சங்கத்தின் மாவட்டத் தலைவராக ஆர்.கபாலி யும், மாவட்ட பொதுச் செய லாளராக எஸ். பாலசுப்பிர மணியமும், பொருளாளராக கே.பிரபாகரனும் தேர்வு செய்யப்பட்டனர்.