உத்திரமேரூர், ஜூன் 18 - வீட்டுமனைப்பட்டா வழங்கிய அனைத்து குடும்பங்களுக்கும் தொகுப்பு வீடு கட்டிக்கொடுக்க தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க காஞ்சிபுரம் மாவட்ட 6ஆவது மாநாடு வலியுறுத்தி யுள்ளது. தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் காஞ்சிபுரம் மாவட்ட 6ஆவது மாநாடு (ஜூன்.18) சனிக்கிழமை உத்திர மேரூரில் மாவட்டத் தலைவர் கே.செல்வம் தலைமையில் நடை பெற்றது. மாநாட்டிற்கு முன்னதாக கால்நடை மருத்துவமனை அருகில் இருந்து ஊர்வலம் புறப்பட்டது. சங்கத்தின் மாவட்டக்குழு உறுப்பினர் வி.கணேசன் சங்க கொடியை ஏற்றிவைக்க மாநாட்டைத் துவக்கி வைத்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு பேசினார். மாவட்டச் செயலாளர் எல்.முரு கேசன் வேலை அறிக்கையையும், பொருளாளர் டி.மணி வரவு, செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சி.சங்கர், சங்கத்தின் மாநில துணைத் தலைவர் எம்.அழகேசன், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டச் செயலாளர் கே.நேரு, தலைவர் என்.சாரங்கன், விவசாய தொழிலா ளர் சங்க நிர்வாகி தர்மராஜ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இம்மாநாட்டை நிறைவு செய்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் இரா.சரவணன் உரையாற்றினார்.
தீர்மானங்கள்
பழங்குடியின மாணவ மாணவிக ளுக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் உண்டு - உறைவிட பள்ளி துவங்கிட வேண்டும். தமிழ்நாட்டில் பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கும் வட கிழக்கு மாவட்டத்தில் பழங் குடி (தனி) சட்டமன்றத் தொகுதி உருவாக் கிட வேண்டும். பழங்குடி, இளைஞர்க ளுக்கு கல்வி தகுதிக்கேற்ப அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பு உருவாக்கிட வேண்டும். பழங்குடி மக்கள் வாழும் கிராமங்களில் குடிதண்ணீர், சாலை வசதி செய்து தர வேண்டும், ரேஷன் கார்டு, நலவாரிய கார்டு, ஆதார் கார்டு, சாதிச்சான்று வழங்க வேண்டும். என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் இந்த மாநாட்டில் நிறை வேற்றப்பட்டன.
புதிய நிர்வாகிகள்
இந்த மாநாட்டில் சங்கத்தின் மாவட்ட தலைவராக கே.செல்வம், செயலாளராக எல்.முருகேசன், பொருளாளராக எஸ். சீனிவாசன் உள்ளிட்ட 23 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. நிறைவாக மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.சினிவாசன் நன்றி கூறினார்.