சென்னை, செப்.25- புற்றுநோய்க்கு புரோட்டான் சிகிக்சை மற்ற கதிர்வீச்சு சிகிச்சையுடன் ஒப்பிடும் போது பக்க விளைவுகளை கணிசமாக குறைப்பது ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. சென்னை தரமணியில் உள்ள ஆசியாவிலேயே மிகப்பெரிய அப்பல்லோ புரோட்டான் புற்றுநோய் மையம் (எபிசிசி) அதிக ஆபத்துள்ள புரோஸ்டேட் புற்று நோயாளிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட புரோட்டான் சிகிச்சையில் இந்த ஆய்வு முடிவுகள் வந்துள்ளன. 150 நோயாளி களுககு மேள்ளப்பட்டு வரும் ஆய்வுகள் முழுமை யாக முடிவடைய மூன்று வருடங்கள் ஆக லாம் என்றும் ஏபிசிசி மருத்துவ இயக்குநரும் கதிர்வீச்சு புற்றுநோயியல் தலைவருமான ராகேஷ் ஜலாலி கூறினார். உலக புற்றுநோய் ஆராய்ச்சி தினத்தை முன்னிட்டு செய்தி யாளர்களிடம் பேசிய அவர், “மேற்கத்திய நாடு களில் இருந்து புற்று நோய் சிகிச்சை குறித்த பெரும்பாலான ஆராய்ச்சி கள் வருவ தால்,இங்குள்ள நோயாளிகளுக்கு சிறந்த முறையில் உதவ இந்திய சூழ்நிலையில் ஆய்வுகள் தேவை என்று அவர் கூறினார். தலை மற்றும் கழுத்து புற்று நோய் இந்தியாவில் மிக வும் பொதுவானது, ஆனால் அதுகுறித்து எந்த ஆய்வும் தற்போதைக்கு கிடைக்கவில்லை என்றார். இதுபோன்ற ஆய்வுகள் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியவும், சரியான சிகிச்சையை அடையாளம் காணவும், உயிர்வாழ்வதை மேம்படுத்தவும் உதவும் என்றார். இந்தியாவில் சுமார் 80விழுக்காடு புரோஸ்டேட் புற்றுநோய்கள் மேற்கத்திய நாடுகளை போல் ஆரம்ப நிலையில் அல்லாமல் முற்றிய நிலையில் கண்ட றியப்படுவதாகவும் அவர் கூறினார். புற்றுநோய் மையத்தன் மூத்த ஆலோசகர் சப்னா நங்கியா, மார்பகப் புற்று நோய்க்கான சிகிச்சை மற்றும் வயதான புற்று நோயாளிகளை கவனிப்பது எப்படி என்பது குறித்து ஆய்வுகள் நடந்து வரு வதாகக் கூறினார். மார்பக புற்றுநோயியின் போது நோயாளி மூச்சை இழுத்துவிடும்போது இதயத்திற்கு பாதிப்பு இல்லாமல் மார்பை சுற்றி மட்டும் கதிர்வீச்சு படும்படி பார்த்துக்கொள்ள முடியும் என்றார்.