districts

img

சிபிஎம் சார்பில் குடியாத்தம் நகராட்சி வேட்பு மனுதாக்கல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் குடியாத்தம் நகராட்சி 36ஆவது வார்டில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கிளைச் செயலாளர் வி.இன்பவள்ளி, 23 ஆவது வார்டில் சிபிஎம் நகரக் குழு உறுப்பினர் ஜி.யுவராஜ் ஆகியோர் வேட்பு மனுதாக்கல் செய்தனர்.  மாவட்டச் செயலாளர் எஸ்.தயாநிதி, நகரச் செயலாளர் வி.காத்தவராயன், மாவட்டசெயற்குழு உறுப்பினர் ப.சக்திவேல், மாவட்டக்குழு உறுப்பினர்கள் வி.குபேந்திரன், பி.குணசேகரன், சி.சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.