சென்னை, ஆக. 23 - மெரினா கடற்கரை, திலகர் திடலில் பொது நிகழ்வுகள் நடத்த அரசு அனுமதிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. ‘உழைக்கும் மக்களால் உருவாக்கப்பட்ட நம்ம சென்னை’ என்ற பொரு ளில் திங்களன்று (ஆக.22) சென்ட்ரல் சதுக்கத்தில், சென்னை தினம் கொண்டாடப் பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில் உறுதிமொழியை வாசித்த மூத்த தலைவர் வே.மீனாட்சிசுந்தரம் கூறிய தாவது: சென்னை நகர மக்களை இணைத்து, மத நல்லிணக்கத்தைப் பேணிப் பாதுகாத்த முன்னோடி களின் வழியில் மாநகரின் பொதுவான மதச்சார்பற்ற பண்பினையும், ஜனநாயக குணங்களையும் வளர்த்தெடுப்போம். உழைக்கும் மக்களால் உருவாக்கப்பட்ட சென்னை யிலிருந்து, வளர்ச்சி, விரிவாக்கம் என்ற பெயரில் மக்களை வெளியேற்றும் நட வடிக்கையை முழுமையாக கைவிட வேண்டும். நாடகம், சினிமா, பாடல், விளை யாட்டு என பன்முக நட வடிக்கைகளில் உழைக்கும் மக்களும் பங்கேற்கும் வண்ணம் பொது அரங்கங்களை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும். விடுதலைப் போராட்ட தலைவர்கள் உள்ளிட்டோர் உரையாற்றிய மெரினா கடற்கரையில் உள்ள திலகர் திடலில் பொது நிகழ்வுகள் நடத்த அரசு அனுமதிக்க வேண்டும். இவ்வாறு கூறினார். இந்நிகழ்வில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, எழுத்தாளர்கள் கரன்கார்க்கி, நிவேதிதா லூயிஸ், ராமச்சந்திரா வைத்தியநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.