விழுப்புரம், மார்ச் 29- விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் பணி யில் ஈடுபடும் காவல் துறையினர் தபால் வாக்குகளை செலுத்த 7 தொகுதிகளிலும் அஞ்சல் வாக்கு சேவை மையங்கள் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டன. தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடும் காவல் துறையினருக்கு தபால் வாக்களிக்க ஏதுவாக, 7 சட்டப் பேரவைத் தொகுதிக ளுக்கும் உள்பட்ட பகுதிகளில் தபால் வாக்கு செலுத்துவதற்கான ‘அஞ்சல் வாக்கு சேவை மையங்கள்’ ஞாயிற்றுக்கிழமை திறக்கப் பட்டன.
செஞ்சி தொகுதிக்கு செஞ்சி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், மயிலம் தொகுதிக்கு பவ்டா கலை, அறிவியல் கல்லூரி யிலும், திண்டிவனம் தொகுதிக்கு மான்ட்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியி லும், வானூர் தொகுதிக்கு அரவிந்தர் கலை, அறிவியல் கல்லூரியிலும், விழுப்புரம் தொகுதிக்கு விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும், விக்கிரவாண்டி தொகுதிக்கு புனித மேரிஸ் மெட்ரிக் மேல்நி லைப் பள்ளியிலும், திருக்கோவிலூர் தொகு திக்கு ஸ்ரீவித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும் அஞ்சல் வாக்கு சேவை மையங்கள் திறக்கப்பட்டன. இந்த அஞ்சல் வாக்கு சேவை மையங்க ளில் காவல் துறையைச் சேர்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் தங்களது தபால் வாக்குகளை செலுத்தினர். விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல் நிலைப் பள்ளி அஞ்சல் வாக்கு சேவை மையத் தில் காவல் துறையினர் தபால் வாக்குகளை செலுத்தியதை மாவட்டத் தேர்தல் அலுவல ரும், ஆட்சியருமான ஆ.அண்ணாதுரை பார் வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராதாகிருஷ்ணன், கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.