அம்பத்தூர், மார்ச் 13- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் 3ஆம் ஆண்டு நினைவு நாளை யொட்டி அரசு பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கம் வழங்கும் நிகழ்வு அம்பத்தூர் ஐ.சி. எப். காலனியில் ஞாயிறன்று (மார்ச் 12) நடைபெற்றது. அம்பத்தூர் நகரச் செய லாளர் குமார் தலைமை தாங்கினார். கட்டிட தொழிலாளர் சங்கத்தின் மாநில செயலாளர் ஆர்.துரைசாமி வரவேற்றார். இதில் கட்சியின் மாநிலச் செயலர் இரா.முத்தரசன் கலந்து கொண்டு, 100 அரசு பள்ளி மாணவ, மாணவி களுக்கு நோட்டு புத்தகம், பேனா, பென்சில் ஆகிய வற்றை வழங்கினார். நிகழ்ச் சியில், மாநில துணைத் தலைவர் நா.பெரியசாமி, மத்திய சென்னை மவட்டச் செயலாளர் பா.கருணாநிதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எஸ்.கண்ணன், நிர்வாகிகள் மாரியப்பன், என்.கோபி நாதன், கக்கன் ஜி நகர் பொது நல சங்கத்தின் தலைவர் ஆர்.எஸ்.முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.