கடலூர், ஜூன் 11 கடலூர் மாவட்டத்தில் இரண்டு நாட்களில் 126 மது விலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசால் வரும் 14ஆம் தேதி வரை பொது முடக்கம் அமல்படுத்தப் பட்டுள்ளது. அதையொட்டி டாஸ்மாக் மதுபானக் கடை களும் அடைக்கப்பட் டுள்ளன. இதனால் கிராமப் பகுதி களில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவது அதிக ரித்துள்ளதோடு, நகர் பகுதி களில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பழக்கமும் அதிக ரித்து வருகிறது. குள்ளஞ் சாவடி பகுதியில் அண்மை யில் சாராய ஊறலை குடித்த 3 மாணவர்கள் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இவ்வாறு, பல்வேறு பகுதிகளில் சாராயம் விற் பனை நடைபெற்று வரு வதை முன்னிட்டு அதனை தடுக்க மதுவிலக்கு காவல் துறையினர் மற்றும் அந் தந்தப் பகுதி காவல் துறை யினரும் இணைந்து கடந்த 9, 10 தேதிகளில் மாவட்டம் முழுவதும் திடீர் சோதனை நடத்தினர். இந்த இரண்டு நாட்களில் மட்டும் 126 மது விலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதில், 138 பேர் கைது செய்யப்பட்டுள்ள னர். மேலும், 14 இருசக்கர வாகனம், ஒரு நான்கு சக்கர வாகனம் உள்பட 15 வாக னங்கள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன. பல்வேறு வழக்குகளில் 277 லிட்டர் சாராயம், 146 லிட்டர் மது பானம், 7 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல் துறை சார்பில் தெரிவிக்கப் பட்டது.