districts

பூண்டி நகராட்சியில் மார்க்சிஸ்ட் கட்சி தொடர் போராட்டம் குடிநீர் இணைப்பு முறைகேடுகளை களைய நடவடிக்கை

அவிநாசி, மே 28– திருமுருகன் பூண்டி நகராட்சியில் குடி நீர் இணைப்புக் கொடுத்ததில் நடைபெற்ற முறைகேடுகளைக் களைய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர் போராட்டத்தை மேற்கொண்டுள்ளது. அதன் தொடர்ச்சி யாக தற்போது முறைகேடுகளைக் களைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் அவிநாசி தாலுகா வில் உள்ள திருமுருகன் பூண்டி பேரூராட்சி யாக இருந்து, உள்ளாட்சி தேர்தலுக்கு முன் பாக நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.தனி அலுவலர் பொறுப்பில் பேரூராட்சி யாக இருந்த சமயம் குடிநீர் இணைப்புகள் தருவதில் ஏராளமான முறைகேடு நடை பெற்றுள்ளது. முறையான விண்ணப்பங் கள் எதுவும் இல்லாமல் லஞ்சம் பெற்றுக் கொண்டு குடிநீர் இணைப்புகள் தரப்பட்டுள் ளன. இதுகுறித்து நிர்வாகம் தலையிட்டு உரிய விசாரணை நடத்தி குடிநீர் இணைப்பு  முறைகேடுகளைக் களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி ஆரம்பத்தில் இருந்தே தொடர்ந்து கோரிக்கை வைத்து போராடி வந் தது. எனவே முறைகேடாக பெற்ற குடிநீர் இணைப்புகளுக்கு அபராத கட்டணம் செலுத்தி முறைப்படுத்திக் கொள்ள காலக் கெடு விதித்து பேரூராட்சி நிர்வாகம் அறி விப்பு வெளியிட்டிருந்தது. இதன் விளை வாக ரூ.1 கோடிக்கு மேல் பேரூராட்சிக்கு வருவாய் பெறப்பட்டது.

அத்துடன் உள்ளாட்சி தேர்தலில் நக ராட்சி நிர்வாகம் பொறுப்பேற்ற நிலையில், குடிநீர் இணைப்புகளை முறைப்படுத்து வதுடன், புதிய இணைப்புகள் கொடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் நகர் மன்ற உறுப்பினர்கள் நகர்மன்ற முதல் கூட் டத்திலேயே வலியுறுத்தினர். இவர்கள் எழுப்பிய கேள்விக்கு, பதில ளித்த நகராட்சி ஆணையர் 800க்கும் மேற் பட்ட இணைப்புகள் கட்டணம் செலுத்தி முறைப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவித் தார்.  கடந்த நகர்மன்றக் கூட்டத்தில் வீட்டுக் குடிநீர் இணைப்பு பெற வைப்புத் தொகை ரூ.5000, கமர்சியல் இணைப்புக்கு ரூ.10,000 என அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிக்குப்  பிறகும், நகராட்சி நிர்வாகத்தில் இருக்கும் சிலர் முறைகேடாக குடிநீர் இணைப்புத் தரும் பணியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. 22ஆவது வார் டில் வியாழனன்று அடுக்குமாடி வீட்டிற்கு முறைகேடான குடிநீர் இணைப்பு வழங்கப் பட்டதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி னர் கையும், களவுமாகப் பிடித்து நகராட்சி ஆணையரிடம் தெரிவித்தனர்.  இந்த முறை கேடான இணைப்பு மீது நடவடிக்கை எடுக் கப்படும் என ஆணையர் தெரிவித்தார்.

இதேபோல் 18ஆவது வார்டு சொர்ண புரி கார்டனில் தனியார் ஒருவருக்கு இரண்டு தினங்களுக்கு முன்பாக குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதனை நகர்மன்ற தலைவர், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி நகர்மன்ற உறுப்பினர்கள், திமுக நகர்மன்ற உறுப்பினர்கள் முன்னிலை யில் நகராட்சி ஆணையர் வெள்ளியன்று ஆய்வு செய்து உறுதிப்படுத்தினார். நகர மன்ற உறுப்பினர்கள் முறைகேடான குடிநீர் இணைப்பை உடனடியாகத் துண்டிக்க கோரினர். எனவே அந்த குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.  மேலும் தொடர்ச்சியாக திருமுருகன் பூண்டி நகராட்சி பகுதியில் மக்கள் பிரதிநிதி கள் தேர்ந்தெடுக்கப்பட்ட சூழலிலும், முறை கேடான குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு வருவதை மாவட்ட நிர்வாகம் உரிய கவனம் செலுத்தி தடுத்து நிறுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. அதேபோல முறைகேடான குடிநீர் இணைப்பு வழங்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளனர்.