பெரம்பலூர், மே 29 - பெரம்பலூர் மாவட்டம் துங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ் (22) மற்றும் 21 வயது இளம்பெண் ஒருவருக் கும், பள்ளியில் படிக்கும்போதே பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போதிருந்தே ஆகாஷ் அந்த இளம்பெண்ணை பாலி யல் தொந்தரவு செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் அந்த இளம்பெண் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் எம்.பி.சி வகுப்பைச் சேர்ந்த ஆகாஷ், அவரை தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளார். தற்போது அந்த இளம் பெண் அரசு கலைக் கல்லூரியில் படித்து வருகிறார். தன்னை காதலிக்குமாறு கூறி ஆகாஷ், இளம்பெண்ணை கடந்த சில நாட்களாக வற்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில் சனிக்கிழமை காலை கல்லூரிக்கு செல்வதற்காக அரசு பேருந் தில் பயணம் செய்த இளம்பெண்ணை சந்தித்த ஆகாஷ், தன்னை காதலிக்க வற்புறுத்தி அவரது செல்போனை பறித்து தகராறில் ஈடுபட்டுள்ளார். அப் போது பயணிகள் சுற்றிவளைத்ததால் ஆகாஷ் தப்பியோடிவிட்டார். இதைத் தொடர்ந்து கல்லூரி முடிந்து ஊர் திரும்புவதற்காக மதியம் 2 மணியள வில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத் தில், பேருந்திற்காக காத்து கொண்டி ருந்த அந்த இளம்பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது அருகிலிருந்த இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த சக மாண வர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்ததை யடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயலாளர் ரமேஷ் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அ. கலையரசி, அ.ரெங்கநாதன், வேப்பந் தட்டை ஒன்றிய செயலாளர் கோகுல கிருஷ்ணன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் கருணாநிதி உள்பட சிஐடியு ஆட்டோ தொழிலாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். அச்சமயம் அந்த இளம்பெண்ணை, ஆகாஷ் கத்தியால் குத்த முயன்றுள் ளதை பார்த்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் தடுத்து, இளம் பெண்ணை மீட்டு, ஆகாஷை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் அந்த இளம்பெண் அளித்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் கொலை மிரட்டல் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த னர்.