கடலூர், செப். 13- மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம் நடத்த கோரி மாவட்ட ஆட்சியரிடம் திங்களன்று மனு அளிக்கப்பட்டது . தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சி யரிடம் அளித்த மனுவில், தமிழகத்தில் பல மாவட்டங்களில் மாற்றுத் திறனாளி களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. கடலூர் மாவட்டத்தில் மருத்துவ முகாம் பல மாதங்களாக நடத்தப்படாமல் உள்ளது. கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் உடனடி யாக மருத்துவ முகாம் நடத்தி மாற்றுத்திற னாளிகளுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். மருத்துவ முகாம் நடத்த மாற்றுத் திறனாளி அலுவலருக்கு ஆட்சியர் அறி வுறுத்த வேண்டும். ஒரு கண் பார்வை இழந்த மாற்றுத்திற னாளிகளுக்கு மாநில கமிஷன் பரிந்துரை யின்படி 40 விழுக்காடு ஊனம் என்று மருத்து வச் சான்று வழங்க ஆட்சியர் பரிந்துரைக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப் பட்டுள்ளது. சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.ஆளவந்தார், மாவட்டப் பொருளாளர் நடேசன், வசந்தி உள்ளிட்டோர் மனு அளித்த னர்.