districts

கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

சென்னை, ஏப். 16 - சென்னை மேற்கு மாம்பலம் ஆரிய கவுடா சாலையில் ஸ்ரீராம் சமாஜ் அமைப்பின் கட்டுப்பாட்டின் கீழ் அயோத்தியா மண்டபம் இயங்கி வந்தது. இந்த அமைப்பில் நிதி  முறைகேடு நடைபெறுவ தாக அந்த அமைப்பின் ஆயுட் கால உறுப்பினரும், சமூக  ஆர்வலருமான எம்.வி.ரமணி (68) அரசிடம் புகார் அளித் தார். அந்த புகாரின் அடிப் படையிலேயே, இந்து அற நிலையத்துறை அண்மை யில் அயோத்தியா மண்ட பத்தை கையகப்படுத்தியது. இந்நிலையில் ரமணி, தனக்கு கொலை மிரட்டல் வருவதாக சென்னை பெரு நகர காவல்துறை ஆணை யரகத்தில் ஏப்.14 அன்று புகார்  அளித்தார். இதையடுத்து ரமணிக்கு, துப்பாக்கி ஏந்திய காவல் பாதுகாப்பு வழங்கப் பட்டது. ரமணி அளித்த புகாரின்  அடிப்படையில் அசோக் நகர் காவல் துறையினர் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் நங்கநல்லூரைச் சேர்ந்த கேட்டரிங் நிறுவன உரிமை யாளர் மகேஷ் (50) என்பவர் தான் குறுஞ்செய்தி மூலம்  கொலை மிரட்டல் விடுத்தது  தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த மகேஷை கைது செய்த னர்.