games

img

இளம் கிரிக்கெட் வீரருக்கு கொலை மிரட்டல் உத்தரகண்ட் கிரிக்கெட் சங்க செயலாளர் மீது வழக்குப்பதிவு

உத்தரகண்ட் மாநிலத்தை சேர்ந்த ஆர்யா சேத்தி (21) என்ற இளம் கிரிக்கெட் வீரர் (பேட் மஸ்மேன்) கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது பயிற்சியாளரால் தாக்கப்பட்டார். இது குறித்து கிரிக்கெட் சங்கத்திடம் ஆர்யா புகார் தெரிவித்த பொழுது கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் பயிற்சியாளருக்கு ஆதரவாக பேசியுள்ளனர். மேலும் இந்த சம்பவத்தை வெளியே கூறி னால் கொலை செய்து விடுவோம் என ஆர்யாவை மிரட்டியுள்ளனர். இதுதொடர்பாக உத்தரகண்ட் கிரிக்கெட் சங்க செயலாளர் மஹிம் வர்மாவிடம் ஆர்யாவின் தந்தை சந்தித்து பேசிய பொழுது,”ரூ.10 லட்சம் லஞ்சம் கேட்டதாகவும், இல்லை யெனில் அவர்கள் தனது மகனின் கிரிக்கெட் வாழ்க்கையை கெடுத்து விடுவார்கள்” என்று மிரட்டியதாக அவர் கூறியுள்ளார். புகாரின் அடிப்படையில் உத்தர கண்ட் கிரிக்கெட் சங்கத்தின் செயலா ளர் மஹிம் வர்மா உட்பட 7 உறுப்பி னர்கள் மீது சதி, மிரட்டி பணம் பறித்தல், பணம் கேட்டு மிரட்டல், தாக்குதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. மஹிம் வர்மா பிசிசிஐயின் முன்னாள் துணைத்தலைவர் பொறுப்பு வகித்த வர் என்பது குறிப்பிடத்தக்கது.