அரியலூர், மார்ச் 10- அரியலூர் மாவட்டம் தத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த வர் கண்ணையன் மகன் குணசேகரன் (41). இவர், கடந்த 2019-ஆம் ஆண்டில் அரியலூர் வட்டாட்சியர் அலு வலகத்தில் தற்காலிக உதவியாளராக இருந்துள்ளார். இந்நிலையில், பாளையக்குடி கிராமத்தை சேர்ந்த இளங்கோவன் மகன் பிரகாசம் (43) என்பவரிடம் அரியலூர் ஆட்சியர் அலுவலகத்தில் தற்காலிக எழுத்தா ளர் பணி வாங்கித் தருவதாக கூறி, ரூ.50 ஆயிரம் பெற்று கொண்டு போலி பணி நியமன ஆணைகளை குண சேகரன் வழங்கியுள்ளார். இதேபோல், பிரகாசம் உறவினர்கள், நண்பர்களிடம் ஊராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளில் அரசு வேலை மற்றும் நிரந்தர பணி வாங்கித் தருவதாக கூறி வங்கி கணக்கு மூலமும், நேரடியாகவும் ரூ.69,35,000 பெற்றுள் ளார். இதுகுறித்து பிரகாசம் கேட்டபோது, அவரை கொலை செய்து விடுவதாக குணசேகரன் மிரட்டியுள் ளார். பிரகாசம் அரியலூர் மாவட்ட காவல் கண்கா ணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளார். இதைய டுத்து, மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் குண சேகரனை கைது செய்தனர்.