தஞ்சாவூர், மே 1- தஞ்சாவூர் சரக காவல் துறை தலைவர் ஏ.கயல்விழி உத்தரவின்படி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் மேற்பார்வை யில், கஞ்சா விற்பனை மற்றும் கடத்தும் கும்பலை கடந்த சில மாதங்களாக கைது செய்து அவர்களை சிறையில் அடைத்து வரு கின்றனர். இந்நிலையில், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தி லிருந்து, திருத்துறைப் பூண்டி வழியாக தஞ்சாவூ ருக்கு காரில் கஞ்சா கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, தஞ்சா வூர் சரக டிஐஜியின் தனிப் படை காவல்துறையினர் காவல் உதவி ஆய்வாளர் எப்.அடைக்கல ஆரோக்கிய சாமி டேவிட், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் என்.கந்த சாமி, எஸ்.கண்ணன், தலைமை காவலர் கே. இளையராஜா, காவலர்கள் கே.சுந்தர்ராமன், டி.ஆனந்த ராஜ் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஞாயிற்றுக் கிழமை காலை திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டி ரவுண்டானா பகுதி யில் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதையடுத்து ஞாயி றன்று காலை, திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டி ரவுண்டானா அருகே வந்த காரை மறித்து சோதனை நடத்தியதில், காரில் 150 கிலோ கஞ்சா இருந்தது. இதையடுத்து காரையும், கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். காரை ஓட்டி வந்த திண்டுக்கல் மாவட்டம் கனவாய்பட்டி யைச் சேர்ந்த சு.மகேஸ்வரன் (26) என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா, கார் ஆகியவை திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப் பட்டுள்ளன என்றும், கைது செய்யப்பட்ட மகேஸ்வர னும் ஒப்படைக்கப்பட்டுள்ள தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.