districts

img

மக்கள் நலனில் முன்மாதிரி: அரகண்டநல்லூர் சிபிஎம் கவுன்சிலர் - மு.சுகி தமிழ்ச்செல்வன் பேரூராட்சி கவுன்சிலர் 12வது வார்டு

தென்பெண்ணை நதிக்கரையின் இடது கரையில் அமைந்துள்ள அரகண்டநல்லூர், பெருமை மிக்க வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்டது. சேர, சோழ, பாண்டியர் காலத்து வீரன் வேள்பாரியின் நெருங்கிய நண்பர் கபிலரின் நினைவுகளையும், தமிழ் வளர்த்த ஞானியார் அடிகளின் மடத்தையும் கொண்ட இப்பகுதி, கி.பி. 10-ம் நூற்றாண்டு முதல் இன்று வரை 96 கல்வெட்டுகளையும், 160 அடி உயர ஏழுநிலை ராஜகோபுரம் கொண்ட கோயிலையும் பெற்றுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தின் முக்கிய வரலாற்று சுற்றுலா தலமாகவும் திகழ்கிறது. அமைப்பும் எல்லைகளும் 4.64 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 12 வார்டுகளையும், 34 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி, திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதிக்கும், விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. திருக்கோவிலூர் அருகில் அமைந்துள்ள இப்பகுதி, கிழக்கில் விழுப்புரம் (32 கி.மீ), மேற்கில் திருவண்ணாமலை (36 கி.மீ), வடக்கில் செஞ்சி (52 கி.மீ), தெற்கில் கள்ளக்குறிச்சி (45 கி.மீ) ஆகிய முக்கிய நகரங்களுக்கு இடையே அமைந்துள்ளது.

மக்கள்தொகை விவரங்கள்

2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 2,876 வீடுகளில் 5,713 மக்கள் வசிக்கின்றனர். 85.1 விழுக்காடு கல்வியறிவு பெற்ற இப்பகுதியில், 1,000 ஆண்களுக்கு 986 பெண்கள் என்ற விகிதத்தில் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1,000 ஆண் குழந்தைகளுக்கு 884 பெண் குழந்தைகள். பட்டியல் சாதியினர் 695 பேரும், பழங்குடியினர் 117 பேரும் வசிக்கின்றனர். முன்மாதிரி கவுன்சிலர் 2022-ல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 12-வது வார்டு கவுன்சிலராக வெற்றி பெற்ற மு.சுகி தமிழ்ச்செல்வன், எம்.ஏ., எம்.எட் பட்டதாரி ஆவார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரான இவரது இணையர் ஏ.ஆர்.கே.தமிழ்ச்செல்வன், அரகண்டநல்லூர் நகரச் செயலாளராக பணியாற்றி வருகிறார். சாதனைகளும் சேவைகளும் - முதல் கூட்டத்திலேயே அரகண்டநல்லூர் பொதுமக்களின் கோரிக்கை சாசனத்தை முன்மொழிந்து தீர்மானம் நிறைவேற்றினார் - 100 நாள் வேலைத்திட்டத்தை அமல்படுத்த மக்களை திரட்டி போராட்டம் நடத்தினார் - அடிப்படை வசதிகள் அற்ற 12-வது வார்டில் கழிவுநீர் கால்வாய் அமைப்பு - மினி டேங்க் மூலம் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு - கருமகாரிய கொட்டகை அமைப்பு - கோயில் மற்றும் பள்ளி வளாகங்களுக்கு அடிப்படை வசதிகள் - இந்த ஆண்டில் மட்டும் 32 ஏழை மாணவர்களின் உயர்கல்விக்கு உதவி - வீடில்லா குடும்பங்களுக்கு வீட்டுமனை மற்றும் தனி ரேசன் கடை பெற தீர்மானம்

மார்க்சிஸ்ட் கட்சியின்  மக்கள் நல இயக்கங்கள்

1. கண்டமங்கலம் ஒன்றியம் சிறுவந்தாடு கிராமத்தில் விவசாய தொழிலாளர்களின் வேலை உரிமைக்காக போராட்டம் 2. திருக்கோவிலூர் மண்டபம் பழங்குடி பெண்கள் பாதுகாப்புக்கான போராட்டம் 3. அரகண்டநல்லூரில் அருந்ததியர் மக்களுக்கு குடியிருப்பு மற்றும் அடிப்படை வசதிகள் 4. அந்திலி கிராமத்தில் நரிக்குறவர் சமூகத்தினரின் நில உரிமை மீட்பு 5. வீரபாண்டி கிராமத்தில் முருகன் கொலை வழக்கில் நீதி கோரி போராட்டம் 6. விவசாயிகளுக்கு நில உரிமை பெற்றுத் தருதல் 7. வேளாண் அடிப்படையிலான தொழிற்சாலைகள் அமைத்து வேலைவாய்ப்பு உருவாக்கம் 8. பெஞ்சால் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் பெற போராட்டம் எதிர்கால திட்டங்கள் வரும் ஜனவரி 3, 4, 5 ஆகிய தேதிகளில் விழுப்புரத்தில் நடைபெறவுள்ள சிபிஎம் 24-வது மாநில மாநாட்டின் செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். “நூற்றி முப்பது கோடி ஜனங்களின் சங்கம் முழுமைக்கும் பொது உடைமை, ஒப்பிலாத சமுதாயம் உலகத்துக்கொரு புதுமை” என்ற இலக்கோடு செயல்பட்டு வருகிறார்கள். இவ்வாறு, மக்கள் நலனுக்காக இடைவிடாது உழைத்து வரும் தோழர் மு.சுகி தமிழ்ச்செல்வன், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளின் பாராட்டையும் பெற்று வருகிறார். ஒரு வார்டின் பிரச்சனைகளை மட்டுமல்லாமல் ஊர் முழுவதின் பிரச்சனைகளையும் மன்றத்தில் எடுத்துரைத்து தீர்வு காண்பதில் முன்னோடியாக திகழ்கிறார்.