சென்னை, பிப். 17- உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக ஐசிஎப் நிர்வாகம் விடுமுறை அளிக்க தேர்தல் ஆணையம் பரிந் துரைக்க வேண்டும் என ஐசிஎப் யுனைடெட் ஒர்க்கர்ஸ் யூனியன் பொதுச் செய லாளர் பா.ராஜாராமன் தமிழ் நாடு தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமாருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பிப்ரவரி 19ஆம் தேதி ஐசிஎப் நிறுவனம் விடு முறை அளிக்காமல் தமிழ் நாடு அரசின் பொது விடு முறை அறிவிப்பை புறக் கணித்துள்ளது. 2-2-2009 ரயில்வே வாரியத்தின் உத்தரவை காரணம் காட்டி ஐசிஎப் தொழிலாளர்களுக்கு வாக்களிக்க சிறிது நேரம் மட்டுமே அனுமதி அளித்து மீண்டும் வேலைக்கு திரும்ப வேண்டும் என்று உத்தர விடுகிறது. ஐசிஎப் நிறுவனத்திற்கு செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தாம்பரம், குமிடிபூண்டி, அரக்கோணம், திருத்தணி, திருவள்ளூர் போன்ற தொலைதூர நகரங்களி லிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைக்கு வந்து செல்கின்றனர். இவர்கள் வாக்காளர்கள் என்ற அடிப்படையில் தங்கள் ஜனநாயக உரிமையை எப்படி நிறைவேற்ற முடியும். வாக்கு செலுத்த மிக நீண்ட வரிசையில் நின்று வாக்கு செலுத்திவிட்டு எப்படி தொழிற்சாலை பணி நேரத்திற்குள் வரமுடியும். தேர்தல் நடைபெறும் சனிக்கிழமை ஐசிஎப் நிறுவனத்தின் பணி நேரம் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை. எனவே தமிழ்நாடு அரசின் உத்தர வின்படி ஐசிஎப் நிறுவனத்திற்கு பொது விடு முறை அறிவிப்பு வெளியிட தமிழ்நாடு தேர்தல் ஆணை யர் என்ற முறையில் தாங்கள் சம்பந்தப்பட்ட ஐசிஎப் நிர்வா கத்தை வலியுறுத்தி ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று எங்கள் சங்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.