சென்னை, ஜூன் 30 - போக்குவரத்து ஊழியர், ஓய்வூதியர்களின் பிரச்சனைகளை தீர்க்காவிடில் வேலை நிறுத்தத்தை நோக்கி செல்வோம் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் கே.ஆறுமுகநயினார் எச்சரித்துள்ளார். ஓய்வுபெறும் நாளன்றே ஓய்வூ திய பணப்பலன்களை வழங்க கோரி வியாழனன்று (ஜூன் 30) மாநகர போக்குவரத்து கழக தலைமையக மான பல்லவன் இல்லம் முன்பு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் பணியாற்றும் ஊழியர்கள் பணி ஓய்வு, விருப்ப ஓய்வு பெறும் நாளன்று ஓய்வு கால பணப்பயன்கள் வழங்கப்படு கின்றன. ஆனால் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு மட்டும் மறுக்கப்பட்டு வருகிறது. இதனை கண்டித்தும், ஓய்வூதி யர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள 72மாத அகவிலைப்படியை வழங்க வேண்டும், 14வது ஊதிய ஒப்பந்தத்தை விரைந்து நிறை வேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு ஆகிய அமைப்புகள் இணைந்து இந்த போராட்டத்தை நடத்தின. இந்த போராட்டத்தினிடையே செய்தியாளர்களிடம் பேசிய சம்மேளன பொதுச்செயலாளர் கே.ஆறுமுக நயினார் கூறியதாவது: கொரோனா காரணமாக ஊழி யர்களின் ஓய்வு பெறும் வயதை அரசு 58லிருந்து 60ஆக உயர்த்தியது. இதன் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தொழிலாளிகள் ஓய்வு பெறவில்லை.
கடந்த மே மாதம் முதல் ஓய்வுபெறும் தொழி லாளர்களுக்கு ஓய்வுகால பணப் பயன்களை வழங்காமல் உள்ளனர். தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த 11 ஆயிரம் கோடி ரூபாய் வருங்கால வைப்பு நிதியை, டிரஸ்டில் செலுத்தவில்லை. 2020ம் ஆண்டு மே மாதத்திற்கு பிறகு மரண மடைந்த, விருப்ப ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 987 கோடி ரூபாய் நிலுவை வைத்துள்ளது. ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 2015ஆம் ஆண்டு முதல் (79 மாதமாக) அகவிலைப்படியை உயர்த்தாமல் உள்ளது.. மருத்துவ காப்பீட்டையும் மறுத்து வருகிறது. பணியில் உள்ள தொழிலாளர்க ளின் ஊதிய ஒப்பந்தம் முடிந்து 3 ஆண்டுகளாகிறது. புதிய ஒப்பந்தத்தை இறுதி செய்யாமல் துறை அமைச்சர் தவணை முறையில் கால அவகாசம் கேட்டு வருகிறார். அரசு பணியில் உள்ள தொழிலாளர் கள், ஓய்வூதியர்களின் கோரிக்கை களை நிறைவேற்ற அரசு தயாராக இல்லை. இதனிடையே போக்குவரத்தை தனியார்மயமாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சென்னையில் 1000 தனியார் பேருந்துகளை இயக்க திட்டமிட்டு வருகிறது. இதனை நடவடிக்கைகளை ஏற்க முடியாது. எனவே, அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் விரைவில் வேலைநிறுத்த அறி விப்பை வெளியிட உள்ளோம். அரசு பிரச்சனைகளை தீர்க்காவிடில் வேலை நிறுத்தத்தை நோக்கி செல்வோம். இவ்வாறு அவர் கூறினார். இந்தப் போராட்டத்திற்கு சங்கத்தின் பொதுச் செயலாளர் வி.தயானந்தம் தலைமை தாங்கி னார். சம்மேளன தலைவர் அ.சவுந்தர ராசன், நிர்வாகிகள் எம்.சந்திரன், ஏ.பி.அன்பழகன், சங்கத்தின் தலைவர் ஆர்.துரை, பொருளாளர் ஏ.ஆர்.பாலாஜி, ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் நிர்வாகிகள் முத்துக்குமார், வீரராகவன், சிஐடியு தென்சென்னை மாவட்டச் செயலா ளர் பா.பாலகிருஷ்ணன் உள்ளிட் டோர் பேசினர்.