திருவள்ளூர், மே. 31- கும்மிடிப்பூண்டி அருகே ரெட்டம்பேடு சாலையில் அடுத்தடுத்து மூன்று கடைகள் உடைத்து பணம், செல்போன் உதிரிபாகங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்குட்பட்ட பஜார் பகுதியில் மளிகை கடை, காய்கறி கடை, பர்னிச்சர் கடை, பூக்கடை, கோயில்கள், ஸ்வீட் கடை, நகைக்கடை, சலூன் கடை, சூப்பர் மார்க்கெட், டீ கடை, மருந்து கடை உள்ளிட்ட பல்வேறு விதமான 200க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்நிலையில் கும்மிடிப்பூண்டி ரெட்டம்பேடு சாலையில் உள்ள சரண்யா நகரைச் சேர்ந்த நவீன் (28) என்பவருக்கு சொந்தமான குளிர்பான கடை, பஜார் பகுதியைச் சேர்ந்த குமார் (48) என்பவருக்கு சொந்தமான செல்போன் கடை, ராஜகோபால் (56) என்பவரின் மளிகை கடை ஆகிய 3 கடைகளின் பூட்டை உடைத்து 10 ஆயிரம் ரூபாய் மற்றும் செல்போன் உதிரி பாகங்கள் கொள்ளை யடிக்கப்பட்டன. இதுகுறித்து 3 கடை உரிமையாளர்களும் கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.