அம்பத்தூர், ஏப். 15- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆவடி தொகுதி செயலாளர் ஏ.ஜான் எம்சி தாயார் அ.சூசையம்மாள் (86) புதன்கிழமை (ஏப். 12) இரவு காலமானார். அவரது உடலுக்கு கட்சியின் வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தர்ராஜன், மாநிலக் குழு உறுப்பினர் எம்.ராமகிருஷ்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.மகேந்திரன், மா.பூபாலன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் சி.சுந்தரராஜ், கே.ரவிச்சந்திரன், சு.லெனின் சுந்தர், கார்தீஷ்குமார், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் பி.என்.உண்ணி, கே.கிருஷ்ணசாமி (சாடியா), ஆவடி மாநகராட்சி மேயர் உதயகுமார், துணை மேயர் எஸ்.சூரிய குமார், திமுக நகரச் செயலாளர் பேபி சேகர், அந்திரிதாஸ் (மதிமுக) உள்ளிட்ட ஏராளமான அரசியல் கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் திருமுல்லைவாயலில் உள்ள கல்லறையில் வியாழனன்று அடக்கம் செய்யப்பட்டது.