districts

ரேஷன் கடையில் பொங்கல் தொகுப்பு வழங்குவதில் முறைகேடு

திருவண்ணாமலை, ஜன. 10- திருவண்ணாமலை அடுத்த மேல் பாலானந்தல் கிராமத்தில் உள்ள (ஏபி055) ரேசன் கடையில் இந்த ஆண்டும், விலையில்லா வேட்டி சேலைக்கு பதிலாக வேட்டி மட்டும் வழங்கப்பட்டுள்ளது. கடந்தாண்டும் இதே கடையில் வேட்டி மட்டும் வழங்கப்பட்டதாகவும் சேலை வழங்கப்படவில்லைஎன்றும்  ரேசன் அட்டை தாரர்கள் கூறினர். இதுகுறித்து கேள்வி கேட்ட பொது மக்களுக்கு கடை ஊழியர்கள் உரிய பதிலளிக்காமல், அலட்சியமாக பேசுவதாக, அட்டைதாரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.  தமிழ்நாடு அரசு அறிவித்த பொங்கல் தொகுப்பை வழங்காமல் பொதுமக்களை அலைக்கழிக்கும் பொதுவிநியோக அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.