districts

img

வீடு கட்டும் இருளர் இன மக்களுக்கு தவணை தொகையை வழங்க வேண்டும்

திருவள்ளூர், நவ 5- கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்டும் இருளர் இன மக்க ளுக்கு தவணை தொகையை முறையாக செலுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அதிகாரிகளை நேரில் சந்தித்து வலி யுறுத்தியுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டம் வீரக நல்லூர் ஊராட்சி பகத் சிங் நகரில் வசிக்கும் இருளர் இன மக்களுக்கு 10 நபர்க ளுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்ட பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. 3 மாதத்தில் வீடு  கட்டி முடிக்க வேண்டும் என்று ஒப்பந்தம் செய்யபட்ட தாக வட்டார வளர்ச்சி அலு வலக அதிகாரிகள் தெரி வித்துள்ளனர். தொகுப்பு வீடுகளை  கடக்கால் வரை அமைத்து காலக் கெடு முடிந்த பிறகும் இது வரை முதல் தவணை தொகையை கூட இன்னும் விடுவிக்க வில்லை.   பழங்குடி மக்கள் கடன் வாங்கி கடக்கால்கட்டு மானம் வரை அமைத்துள்ள நிலையில் அடுத்து வீடு கட்ட முடியாமல் அல்லல் பட்டு வருகிறார்கள். இதுகுறித்து சிபிஎம் சார்பில் செவ்வாயன்று (நவ 5), திருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தியை  சந்தித்து மனு கொடுக்கப்பட்டது. மனுவை பெற்றுக் கொண்ட அதிகாரி விரைவில் பணம் விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதில் கட்சியின் வட்டச் செய லாளர் வி.அந்தோணி மாவட்டக் குழு உறுப்பினர் ஏ.அப்சல் அகமது,  வட்டக் குழு உறுப்பினர் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.