districts

img

உதவித் தொகையை உயர்த்தி வழங்கிடுக மாற்றுத்திறனாளிகள் வடசென்னை மாநாடு வலியுறுத்தல்

சென்னை, ஜூலை 20- மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என வடசென்னை மாவட்ட மாநாடு வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கத்தின் வடசென்னை மாவட்ட 4 ஆவது மாநாடு தண்டையார் பேட்டை யில் புதனன்று (ஜூலை 20) நடைபெற்றது. மூத்த நிர்வாகி வி.கே.கோவிந்தசாமி கொடி ஏற்றினார். மாவட்டத் தலைவர் ஆர்.ஜெயச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.செல்வ குமாரி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாநிலத் தலைவர் பா.ஜான்சிராணி மாநாட்டை துவக்கி வைத்தார். மாவட்டச்  செயலாளர் கி.ராதை வேலை அறிக்கையை யும், பொருளாளர் இரா.நடராஜன் வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜே. எபினேசர், 41ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் பா.விமலா, 42ஆவது வட்ட மாமன்ற உறுப்பினர் மோ.ரேணுகா, எல்.ஐ.சி  வளர்ச்சி அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் யு.மணிக்குமார், மாநில துணைச்  செயலாளர் எஸ்.கே.மாரியப்பன், அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.ராணி, இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்திம் மாவட்டச் செயலா ளர் எல்.பி.சரவண தமிழன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநிலப் பொருளாளர் கே.ஆர்.சக்கரவர்த்தி மாநாட்டை நிறைவு செய்து பேசினார்.

தீர்மானங்கள்
40 விழுக்காடு முதல் 74 விழுக்காடு வரை பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு 3 ஆயிரம் ரூபாயும், 75 விழுக்காடு முதல்  100 விழுக்காட்டிற்கு மேல் பாதிக்கப்பட்ட வர்களுக்கு 5 ஆயிரம் ரூபாயாக உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும், அரசுத்துறைகளில் 4 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் படி நிரந்தரப் பணிகளில் மாற்றுத்திறனாளிகளை பணியமர்த்த வேண்டும், தனியார் துறைகளில் 5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க சிறப்பு சட்டம்  இயற்ற வேண்டும், சுயதொழில் புரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய வங்கிகளில் கடன் வழங்குவதற்கான விதி களை எளிமைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட  பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
புதிய நிர்வாகிகள்
தலைவராக ஆர்.ஜெயச்சந்திரன், செயலாளராக எஸ்.ராணி, பொருளாளராக ஆர்.நடராஜன் உள்ளிட்ட 23 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.