இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தென்சென்னை மாவட்டக்குழுக்கள் இணைந்து தரமணி-காந்தி நகரில் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் படிப்பகத்தை தொடங்கியுள்ளன. படிப்பகத்தை பேரா. இரா.காளீஸ்வரன் தொடங்கி வைத்து மாணவர்களிடையே உரையாற்றினார். வாலிபர் சங்கத்தின் வேளச்சேரி பகுதிச் செயலாளர் குமரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாவட்டத் தலைவர் எம்.ஆர்.சுரேஷ்குமார், செயலாளர் தீ.சந்துரு, மாணவர் சங்க மாவட்ட தலைவர். ச.ஆனந்தகுமார், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் அம்பிகா உள்ளிட்டோர் பேசினர்.