செங்கல்பட்டு,ஜன.23 செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழு குன்றத்தில் 5 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்களை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார் சொர்ணவாரி பருவத்தில் 1000 மெட்ரிக் டன் அளவில் சம்பா பருவத்தில் 25 இடங்கள் மூலம் 30,000 மெட்ரிக் டன் அளவிற்கு மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்பட்டு இருந்தது. செங்கல்பட்டு மாவட்டம் திருக்க ழுக்குன்றம் வட்டத்திற்குட்பட்ட இடை யாத்தூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் நேரடி கொள்முதல் நிலையத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:- விவசாயிகள் கோரிக்கையை ஏற்று 5 இடங்களில் நெல் கொள்முதல் நிலை யங்கள் திறக்கப்படுகிறது. இடையாத்தூர், படாளம், மதுராபுதூர், சூணாம்பேடு மற்றும் காரியந்தாங்கல் ஆகிய இடங்களில் தொடங்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கனவே சொர்ணவாரி பருவத்தில் 35இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் தொடங்கப்பட்டு 40,000 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. சம்பா பருவத்தில் தொடங்க உள்ள 5 இடங்களையும் சேர்த்து மொத்தம் 59 இடங்களில் நெல் கொள்முதல் நிலை யங்கள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த 59 இடங்களிலும் 70,000 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய முதன்மை யான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. கடந்த காலங்களில் மொத்தம் 7 இடங்களில் மட்டுமே நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டது.
சொர்ணவாரி பருவத்தில் 1000 மெட்ரிக் டன் அளவில் சம்பா பருவத்தில் 25 இடங்கள் மூலம் 30 ஆயிரம் மெட்ரிக் டன் அளவிற்கு மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்பட்டு இருந்தது. தமிழக முதல்வர் விவசாயிகள் மீது அக்கறை கொண்டு எங்கெல்லாம் விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையங்கள் கேட்கிறார்களோ அந்த இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் தொடங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் 59 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் தொடங்க திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக இன்றையதினம் 5 இடங்களில் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த நேரடி கொள்முதல் நிலையங்கள் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு அதற்கான தொகை விவசாயிகளுக்கு வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட உள்ளது. முதலமைச்சர் ஒன்றிய அரசு நிர்ணயம் செய்யப்பட்ட நெல் கொள்முதலுக்கான அடிப்படை ஆதார விலையுடன் சேர்த்து மாநில ஊக்க தொகையான குவிண்டால் ஒன்றுக்கு சின்னரகத்திற்கு கூடுதலாக ரூ.100 பொது ரகத்திற்கு கூடுதலாக ரூ.75 வழங்க உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத், செல்வம் எம்.பி., சட்டமன்ற உறுப்பின ர்கள் க.சுந்தர், எம்.பாபு, வேளாண்மை துறை இணை இயக்குநர் சுரேஷ், ஆட்சிய ரின் நேர்முக உதவியாளர் தியாகராஜன் கலந்து கொண்டனர்.