விவசாயிகளைக் கடுமையாகப் பாதிக்கும்வேளாண் சட்டங்களை மத்தியஅரசு கொண்டு வந்திருக்கிறது.கேரள அரசு அதற்கு எதிராகசட்டம் இயற்றியிருப்பதுபோல், தமிழகஅரசால் நிறைவேற்றமுடியவில்லை.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் அமலானால் நெல் கொள்முதல் நிலையங்கள் அனைத்தும் இழுத்து மூடப்படும். நெல்லுக்கு கட்டுப்படியாகக் கூடிய விலை கிடைக்காது, கரும்புக்குக் கட்டுப்படியாகக் கூடிய விலை கிடைக்காது. அனைத்து உணவுப் பொருள்களையும் வெளிச்சந்தையில்தான் அனைத்துத் தரப்பினரும் வாங்க வேண்டியிருக்கும். நியாயவிலைக் கடைகள் மூடப்படும்.இவற்றின் விளைவாக நாட்டில்மிகப்பெரிய அளவிற்கு பசி-பட்டினியுடன் வாழ வேண்டிய நிலை ஏற்படும்.
இதுமட்டுமல்ல, மத்திய ஆட்சியாளர்கள் சமுதாயத்தை நூறாண்டு காலத்திற்குப் பின்னுக்குத் தள்ள நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த நூறாண்டு காலமாகபொதுவுடைமை இயக்கங்களும், திராவிட இயக்கங்களும் உருவாக்கித் தந்துள்ள சமுதாயமுன்னேற்றங்களை, பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பெற்றுத்தந்துள்ள உரிமைகளை ஒழித்துக்கட்ட நடவடிக்கைகள் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். பிற்படுத்தப்பட்ட வகுப்புகளிலிருந்தும், தலித், பழங்குடியின வகுப்புகளிலிருந்தும் மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள் உருவாகி இருக்கிறார்கள். இவற்றையெல்லாம் ஒழித்துக்கட்டத்தான் மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையைக் கொண்டு வந்திருக்கிறது. இதற்கு அஇஅதிமுக அரசு முழுமையாக ஆதரவு அளித்துக் கொண்டிருக்கிறது.எனவே மக்களுக்கு இவ்வாறாக சமுதாய ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் எல்லாம் போக்கப்படவேண்டுமானால் மத்திய மோடி அரசாங்கமும் அதற்கு அனைத்துவிதங்களிலும் ஆதரவு அளித்துவரும் அஇஅதிமுக அரசும் அகற்றப்பட வேண்டும்.
கந்தர்வக்கோட்டையில் திங்களன்று மாலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம்.சின்னத்துரைக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் பேசியதிலிருந்து...