கும்பகோணம், மார்ச் 10- தஞ்சை மாவட்டம் திரு விடைமருதூர் தெற்கு ஒன்றி யத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் ஜனவரி மாத இறுதியிலும் பிப்ரவரி மாதத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் பல கட்ட போராட்டத்திற்கு பிறகு திறக்கப்பட்டது. அது தற்போது திடீரென்று மூடப் பட்டதால் விவசாயிகள் நெல் கொள்முதல் செய்யாமல் குவிந்து கிடக்கிறது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திரு விடைமருதூர் தெற்கு ஒன்றி யச் செயலாளர் பழனிவேல் கூறியதாவது, கும்பகோணம் அருகே நாலூர், திருச்சேறை, கூகூர், பெரப்படி, துக்காச்சி, திருநறையூர் பவுன் டரீகபுரம், விட்டலூர், அம்மன்குடி விலங்குடி புத்தகரம் உள்ளிட்ட பகுதிகளில் விவ சாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சம்பா பயிரிட்டு வந்தனர். இவர்கள் விவசாயத்தி ற்கு தேவையான தண்ணீர் வரத்து இல்லாத காரணத்தி னால் காலதாமதமாக நெல் பயிரிட்டு தற்போது வரை அறுவடை நடந்து வருகிறது. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பல கட்ட போராட்டத்திற்கு பிறகு கடந்த மாதங்களில் அரசு கொள்முதல் நிலையங்கள் திருவிடைமருதூர் ஒன்றி யத்தில் திறக்கப்பட்டு கொள் முதல் செய்து வந்தனர். இடை யிடையில் சாக்கு இல்லாம லும் சுமைதூக்கும் பணி யாளர்களுக்கும் கொள் முதல் பணியாளர்களுக்கும் சம்பளம் வழங்காமல் இருந்து வந்த நிலையில் உரிய அதி காரிகளிடம் தெரிவித்து நடவ டிக்கை மேற்கொள்ளப் பட்டது. இந்நிலையில் கும்பகோ ணம் அருகே உள்ள 12 கிரா மங்களில் உள்ள அரசு கொள்முதல் நிலையங்கள் எவ்வித அறிவிப்பும் இன்றி திடீரென்று மூடப்பட்டுள்ளது. இதனால் தற்போது அறு வடை செய்து வரும் விவசாயி கள் நெல்லை விற்கமுடியா மல் மூடிய கொள்முதல் நிலையங்கள் இன்று திறக்குமோ நாளை திறக்கு மோ என்ற எண்ணத்தில் விவ சாயிகள் அறுவடை செய்த நெல்லை அந்தந்தப் பகுதி அரசு கொள்முதல் நிலை யங்களில் நெல்லை குவிய லாக வைத்திருந்து காத்தி ருந்து இரவுபகலாக பாது காத்து வருகின்றனர். அரசு அதிகாரிகளோ எவ்வித நட வடிக்கை இல்லாமல் தற்போது பூட்டப்பட்டு இருப்பதால் விவசாயிகள் தனியார்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்ய வாய்ப்புள்ளது ஆகவே மூடிய கொள் முதல் நிலையங்களை உடனே திறந்து விவசாயி களை கண்டறிந்து அவர்கள் அறுவடை செய்த நெல்லை உடன் கொள்முதல் செய்ய வேண்டும் இல்லை என்றால் விவசாயிகளை திரட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போராட் டம் நடைபெறும் எனத் தெரிவித்தார்.