districts

img

பணப்பலன், வேலை வழங்காத ஹூண்டாய் நிர்வாகத்தை எதிர்த்து வேலைநிறுத்தம்: அ.சவுந்தரராசன் எச்சரிக்கை

சென்னை, மார்ச் 11 - பணியின்போது உயிரிழந்த தொழிலாளிக்கு பணப்பலன்களை வழங் காமல் உள்ள ஹூண்டாய் நிர்வாகத்தை கண்டித்து வேலைநிறுத்தம் நடை பெறும் என்று சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்த ரராசன் எச்சரித்துள்ளார். ஹூண்டாய் தொழிற் சாலையில் 25 வருடமாக பணிபுரிந்து வந்த தொழி லாளி பூபதி, கடந்த ஆண்டு மார்ச் 10 அன்று பணி யில் இருந்தபோது மாரடைப் பால் காலமானார். தொழி லாளர்களின் போராட்டத் தையடுத்து நிர்வாகம், குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்குவ தாக அறிவித்தது. ஓராண் டாகியும் பணி வழங்க வில்லை. பணப்பலன்க ளையும் வழங்காமல் ஏமாற்றி வருகிறது. எனவே, பணப்பலன் களையும், குடும்பத்தில் ஒரு வருக்கு நிரந்தர வேலை யும் வழங்க கோரி ஹூண்டாய் மோட்டர்ஸ் இந்தியா தொழிலாளர் சங்க (சிஐடியு) நிர்வாக குழுவினர் ஒரு மாதமாக பட்டினி போராட்டம் நடத்தி  வந்தனர். கடந்த 10 நாட்க ளாக கோரிக்கை அட்டை  அணிந்து பணி புரிந்து வந்த னர். அதன்பிறகும் நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் தொழி லாளி பூபதியின் ஓராண்டு நினைவு நாளை ஒட்டி மார்ச் 9 அன்று ஆலை வாயிற் கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமை தாங்கி பேசிய சங்கத்தின் கவுரவ தலைவரும், சிஐடியு மாநில தலைவருமான அ. சவுந்தரராசன், “நிர்வா கம் ஒப்புக் கொண்ட கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும், சட்டப்படியான பணப்பலன்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தி வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கப்படும். அதனைத் தொடர்ந்து வேலை நிறுத் தம் நடைபெறும்” என எச்சரித்தார். இந்தக் கூட்டத்தில் சங்கத்தின் பொதுச் செய லாளர் சு.கௌரிசங்கர், பொருளாளர் குமரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.